சென்னை:
தமிழகத்தின் புதிய முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவையில்,பல்லடம் தொகுதியைச் சேர்ந்த வேலுசாமி என்பவர் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வராக ஜெயலலிதாவை நியமித்தது செல்லாது என்று நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து ஜெயலலிதாவின் முதல்வர் பதவி ரத்தானது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தின் புதிய முதல்வராக பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ.ஓ.பன்னீர் செல்வம் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருடன் 23அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
பழைய அமைச்சர்கள் 22 பேரும் மீண்டும் அமைச்சர் பதவி ஏற்றனர்.வீட்டுவசதித்துறை அமைச்சர்ஏ.கே. செல்வராஜுக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை.
இவருக்கு பதிலாக கோவை, பல்லடம் எம்.எல்.ஏ. வேலுச்சாமி புதிய அமைச்சராகபதவி ஏற்றுக் கொண்டார்.
இவர்களுக்கு தமிழக ஆளுனர் சி.ரங்கராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!