மத்திய அரசைக் கண்டித்து போராட்டம்- 1500 கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையை உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளை எதிர்த்து சென்னையில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து 1500க்கும் மேற்பட்ட அக் கட்சித்தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.

ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் மத்திய அரசின் அமெரிக்க ஆதரவுப் போக்கு, புதிய பொருளாதாரக் கொள்கைமற்றும் கல்வியில் மதசார்பான பாடங்களைப் புகுத்தும் திட்டம் போன்றவற்றை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சியினர்ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்திற்கு அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சங்கரையா தலைமைதாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கட்சித்தொண்டர்கள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷம்எழுப்பினார்கள்.

பிறகு போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த 1500க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்களைக் கைது செய்துஅழைத்துச் சென்றனர். தற்போது அவர்கள் அனைவரும் போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற