டெண்டுல்கர்தான் எங்களுக்கு பூஸ்ட் - கங்குலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜொகன்னஸ்பர்க்:

"இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கரும் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளேயும் மீண்டும்அணியில் இடம்பெற்றது எங்களுக்கு மிகவும் தெம்பளிக்கிறது" இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவ்ரவ்கங்குலி கூறியுள்ளார்.

"இதற்கு முன் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணங்களின்போது ஏகப்பட்ட தோல்விகளைத்தழுவியிருக்கிறோம். ஆனால், நடந்ததை மறப்போம், நடப்பதையே நினைப்போம்" என்று மேலும் கூறியுள்ளார்கங்குலி.

திங்கள்கிழமை நள்ளிரவுக்கு மேல் மும்பையிலிருந்து கிளம்பிய இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காசென்றடைந்தது.

தென் ஆப்பிரிக்காவில் 2 மாதம் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட்போட்டிகளிலும், 3 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா -கென்யா நாடுகளுக்கிடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள்அக்டோபர் 5 முதல் 27ம் தேதி வரை நடைபெறுகின்றன.

இதைத் தொடர்ந்து, நவம்பர் 3 முதல் 27ம் தேதி வரை தென் ஆப்பிரிக்காவுடன் 3 டெஸ்ட் போட்டிகளில்மோதுகிறது இந்தியா.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற