"சட்டத்தை அவமதித்த சட்ட அமைச்சர் பொன்னையன்"

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்ட அமைச்சர் பொன்னையன் உச்சநீதிமன்ற அவமதிப்பு செய்துவிட்டார் என்று முன்னாள் முதல்வர்கருணாநிதி குற்றம்சாட்டினார்.

ஜெயலலிதா முதல்வர் பதவியேற்றது செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்ததீர்ப்பை எதிர்த்துஅதிமுகவினர் போராட்டம் நடத்தினார்கள்.

மேலும் பிரதமர் வாஜ்பாய், கருணாநிதி மற்றும் மத்திய அமைச்சர்கள் மாறன், அருண்ஜெட்லி ஆகியோர்தான்ஜெயலலிதா பதவி விலக காரணமாக இருந்தவர்கள் என்று கூறி அவர்களின் உருவ பொம்மைகளை அதிமுகவினர்எரித்தனர்.

இந்த போராட்டங்களில் அதிமுக அமைச்சர்களும் பங்கேற்றனர்.

அப்போது தமிழக சட்டம் மற்றும நிதி அமைச்சர் பொன்னையன், நீதி விலை போனது என்று கோஷம்போட்டதாகவும். மாநில சட்ட அமைச்சரே இவ்வாறு சொல்லியதன் மூலம் அவர் உச்சநீதிமன்றத்தை அவமதிப்புசெய்துவிட்டார் என்றும் கருணாநிதி குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது,

மாநிலத்தின் சட்ட அமைச்சராக இருப்பவரே "நீதி விலை போனது" என்று கோஷம் எழுப்புகிறார். இதுகண்டனத்திற்குரிய செயலாகும். மேலும் இது நீதிமன்றத்தை அவமதிப்பு செய்வது போன்ற செயலாகும்.

ஜெயலலிதாதான் அவரது கட்சிக்காரர்களிடமும், அமைச்சர்களிடமும் இவ்வாறு கோஷம் போடத்தூண்டியிருக்கிறார்.

பிரதமர் வாஜ்பாய், மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, மாறன் மற்றும என்னுடைய போஸ்ட்டர்களுடன் வந்துஅதிமுகவினர் போராட்டம் நடத்துகிறார்கள். மேலும் நாங்கள்தான் அந்தத் தீர்ப்புவெளியிடக் காரணமாகஇருந்தவர்கள் என்று கூறி எங்களின் உருவபொம்மைகளையும் எரிக்கிறார்கள்.

இதிலிருந்து ஜெயலலிதாவும், அதிமுகவினரும் சட்டத்தை மதிப்பதே இல்லை என்பது விளங்கும்.

வரும் உள்ளாட்சித் தேர்தலில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி ஆகிய மாநகராட்சி மேயர் பதவிகளுக்குதிமுக போட்டியிடும்.

மேலும் பாட்டாளி மக்கள் கட்சியும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும் ஒன்றாக ஒரே அணியில் இருக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

அரசியல் லாபத்திற்காக அல்ல, வட மாவட்டங்களில் வன்னியர் மற்றும் தலித்கள் ஒற்றுமைக்காகவாவது அவர்கள்ஒரே அணியில் இருக்கவேண்டும்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற