காரைக்குடியில் கட்டிடம் இடிந்து 2 தொழிலாளர்கள் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

காரைக்குடி:

காரைக்குடி அருகே பழைய கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 2 பேர் கொல்லப்பட்டனர்.மேலும் 2 பேரை காணவில்லை.

இந்த சம்பவம் பற்றி கூறப்படுவதாவது:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நேமத்தான்பட்டி பெரியண்ணன் என்பவருக்குசொந்தமாக ஒரு பழைய கட்டிடம் இருந்தது. இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக 2மாடி கட்டிடம் கட்டும் பணி சில தினங்களாக நடந்து வருகிறது.

இந்த கட்டிடத்தின் முதல் மாடிக்கு ஜன்னல் அமைக்கும் பணி நேற்று (புதன்கிழமை) நடந்துகொண்டிருந்தது.

அப்போது திடீரென கட்டிடம் முழுவதுமாக சரிந்து விழுந்தது. இதில் கட்டிடத்தில் வேலைசெய்து கொண்டிருந்த 5 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் 5 தொழிலாளர்கள்உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

மருத்துவமனைக்கு செல்லும் வழயிலேயே 2 பேர் இறந்து போனார்கள். காயமடைந்தமற்றவர்கள் சிகிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கட்டிட வேலையை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த இஞ்ஜினியர்சரவணன், மேஸ்திரி ஒருவரையும் காணவில்லை என தெரியவந்தது. இவர்கள் கட்டிடஇடிபாடுகளில் சிக்கி இறந்திருக்கக்கூடும் என்று அச்சம் நிலவி வருகிறது. கட்டிடம் இடிந்துவிழுந்ததற்கு அஸ்திவாரம் பலம் இல்லாமல் இருந்ததே காரணம் என்று கூறப்படுகிறது.

தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற