சீக்கிய, முஸ்லீம் மதத் தலைவர்களுடன் புஷ் சந்திப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

அமெரிக்காவில் வாழும் முஸ்லீம் மற்றும் சீக்கிய மதத்தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் புஷ் மற்றும் அந்நாட்டுநாடாளுமன்ற (யு.எஸ். காங்கிரஸ்) உறுப்பினர்கள் சந்தித்தனர்.

அமெரிக்காவில் கடந்த 11ம் தேதி தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து, அங்கு வாழும் முஸ்லீம்மக்கள் மீதும், சீக்கியர்கள் மீதும் அமெரிக்க மக்கள் தாக்குதல் நடத்திவருகிறார்கள். சீக்கியர்கள் அரபுமுஸ்லீம்களைப்போல தலையில் டர்பனுடன், தாடியும் வைத்திருப்பதால் அவர்கள் மீதான தாக்குதலும் அதிகரித்துவருகிறது.

இதுபோன்ற தாக்குதலை தடுத்துநிறுத்தி தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று கோரி முஸ்லீம்மதத்தலைவர்களும், சீக்கிய மதத்தலைவர்களும் அமெரிக்க அதிபர் புஷ் மற்றும் அமெரிக்க நாடாளுமன்றஉறுப்பினர்களைச் சந்தித்தார்கள்.

இந்தச் சந்திப்பில் சீக்கியர்கள், முஸ்லீம்கள் தவிர இந்திய வம்சாவளியினர், யூதர்கள், ரோமன் கத்தோலிக்ககிறிஸ்தவர்கள், ஹிஸ்பானியர்கள்(நீக்ரோக்கள்) மற்றும் ஆப்ரிக்க அமெரிக்கர்கள் ஆகிய இனத்தவரும்கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பு வெள்ளைமாளிகையில் நடந்தது. இந்தக் குழுக்களிடம் புஷ் பேசுகையில்,

பொதுவான சிந்தனைகளாலும், மதிப்பீடுகளாலும் நாம் எல்லோரும் அமெரிக்கர்கள்தான்.

சில இஸ்லாமிய தீவிரவாதிகள் கடந்த 11ம் தேதி அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தினார்கள். அதற்காகஒன்றுமறியாத முஸ்லீம்கள் மீதோ, அவர்களைப்போல தோற்றமளிக்கும் சீக்கியர்கள் மீதோ அல்லது மற்றவர்கள்மீதோ தாக்குதல் நடத்தப்படுவது கண்டனத்திற்குரியது என்றார்.

மேலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசும்போது, அமெரிக்காவில் வாழும் அனைத்து பிரிவுமக்களும், தங்கள்பழக்கவழக்கங்களில் வேறுபட்டாலும், அனைவரும் ஒன்றுதான். அமெரிக்கர்களுக்கு உள்ளதைப் போலஅவர்களுக்கும் சமமான, பாரபட்சமற்ற உரிமைகள் உண்டு என்றனர்.

இதற்கிடையில் லூசியானா மாகாணத்தின் பிரதிநிதி ஜான் குக்சி ஒரு ரேடியோவுக்கு அளித்த பேட்டியில், தலையில்டர்பனுடன், அதைச்சுற்றி பெல்ட் அணிந்திருப்பவர்கள் அனைவரும் சந்தேகத்திற்குரியவர்கள் என்றும், அவர்கள்அனைவரும் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் கூறினாராம்.

இதுபோன்று அரசு அதிகாரிகள் பேசுவது, அதிபர் புஷ்ஷை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது என்று வெள்ளைமாளிகை செய்தித்தொடர்பாளர் அரி பிளெய்ஷர் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற