ஆன்மிக யாத்திரை செல்கிறார் ஜாமீனில் வெளி வந்த சுதாகரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

"திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி கோவிலுக்கும, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கும் ஆன்மிகயாத்திரை செல்கிறேன். அது முடிந்த பின்பே சென்னைக்கு திரும்புவேன்" என்று வருமானத்திற்கு அதிகமாக சொத்துசேர்த்த வழக்கில் ஜாமீனில் விடுதலையாகியுள்ள ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன்கூறியுள்ளார்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, சுதாரகன் மீது வழக்கு தொடரப்பட்டு பாளையங்கோட்டைசிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அவர் மீது தொடரப்பட்ட பிற வழக்குகளில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டிருந்தது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கிலும் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்என்று கோரி சுதாகரன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த சென்னைமுதலாவது தனி நீதிமன்ற நீதிபதி ஆறுமுகபெருமாள் சுதாகரனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதன்படி, சுதாகரன் ரூ.50 ஆயிரத்திற்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனும் செலுத்தவேண்டும். ஜாமீனில் இருக்கும் காலத்தில், ஒவ்வொரு மாதமும் முதல் வேலை நாளன்று அவர் வழக்கு விசாரணைநடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை புலன் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து சுதாரகன் ஜாமீனில் விடுதலையானார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியதாவது:

புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள பன்னீர் செல்வத்திற்கு உங்கள் மூலம் நான் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். அவரை சந்திப்பது பற்றி பின்னர் முடிவெடுப்பேன்.

ஜெயலலிதாவை முதல்வராக நியமித்தது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது தர்மத்திற்கு கிடைத்தவெற்றி. நீதிக்கு தலைவணங்குபவர்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி.

பாளையங்கோட்யிைலிருந்து திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி கோவிலுக்கும், திருச்செந்தூர் முருகன்கோவிலுக்கும் ஆன்மிக யாத்திரை செல்கிறேன்.

அதன் பின்புதான் சென்னை செல்வேன். சென்னையில் என் தாயாரை சந்தித்து ஆசி பெறுவேன். பின் என்மனைவியையும், குழந்தைகளையும் சந்திப்பேன்.

உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின்புஅறிவிப்பேன்.

யாராக இருந்தாலும் உயர் பதவிக்கு வரும் யோகம் இருந்தால் அதை தடுக்க எவராலும் முடியாது. நான் முதல்வராகமுடியுமா என்பது பற்றி என் ஜாதகத்தை பார்த்தால்தான் தெரியும் என்றார் சுதாகரன்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற