தென்காசியில் கஞ்சா செடி வளர்த்த ஆசிரியர் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

தென்காசி:

தென்காசி அருகே பட்டதாரி ஆசிரியர் ஒருவர் தனது தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்ததால் கைதுசெய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

தென்காசி அருகே உள்ள வடகரை வேலாயுதபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். பட்டாதாரி ஆசிரியரான இவர் தனதுகடலைத் தோட்டத்தில் இரண்டரை அடி உயரமுள்ள கஞ்சா செடியை வளர்த்து வருவது பற்றித் தகவல் வந்தது.

தென்காசி போலீஸ் துணை சுப்பிரண்டு மயில்சாமி உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர், ஏட்டு அக்பர் அலிஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று முருகனிடம் விசாரணைை நடத்தினார்கள்.

பிறகு முருகனைக் கைது செய்து கோர்ட்ஐல் ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி பொன்பிரகாஷ்முருகனை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

தற்போது முருகன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற