காபூலை நோக்கி முன்னேறும் நார்தர்ன் அல்லையன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காபூல்:

நார்தர்ன் அல்லையன்ஸ் படையினர் ஆப்கானின் தெற்கு திசையில் காபூலை நோக்கி விரைந்து முன்னேறிவருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் வடக்குப் பகுதியை ஆட்சிசெய்து வருபவர்கள் நார்தர்ன் அல்லையன்ஸ் என்ற பிரிவினர்.இவர்களுக்கும், ஆப்கானின் பெரும் பகுதியை ஆளும் தலிபான்களுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக கடும்சண்டை நடந்து வருகிறது.

இந்நிலையில் தலிபான்களின் ஆதரவாளரான பின்லேடன் தலைமையில் இயங்கும் தீவிரவாதிகள் அமெரிக்காவில்நடத்திய தாக்குதலையடுத்து, இந்த சண்டை மேலும் வலுத்துள்ளது.

தலிபான்கள் ஆளும் ஆப்கானின் முக்கிய நகரங்களான காபூல் மற்றும் காண்டஹார் நகரங்களைக்கைப்பற்றுவதையே நார்தர்ன் அல்லையன்ஸ் பிரிவினர் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். ஆனால் அதுஅவ்வளவு சலபமான காரியம் இல்லை என்றும் அவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள்.

இதற்கிடையில் நார்தர்ன் அல்லயன்சின் தலைவரான அகதமு ஷா மசுத், தலிபான்களால் கொல்லப்பட்டார்.இதுகுறித்து நார்தர்ன் அல்லயன்ஸ் படைவீரர் பர்சி சாபர் கூறுகையில்,

கடந்த 6 ஆண்டுகளாக நாங்கள் தலிபான்களுக்கு எதிராக போராடி வருகிறோம். தினமும் குறைந்தது 10முறையாவது, 2 பிரிவினருக்கும் இடையே துப்பாக்கி சூடு நடக்கிறது என்றார்.

தற்போது, அமெரிக்கப்படை தலிபான்கள் மீது நடத்தவிருக்கும் தாக்குதலை எதிர்நோக்கி நார்தர்ன் அல்லயன்ஸ்படையினர் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதன்மூலம் தங்கள் எதிரிகளான தலிபான்கள் ஒழிய வேண்டும் என்றுஅல்லையன்ஸ் படையினர் விரும்புகிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற