மதுரையில் ரூ.22 லட்சம் மோசடி செய்த 10 வங்கி ஊழியர்களுக்கு ஆயுள் தண்டனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை மேலூர் கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்களின் பணத்தில் ரூ.22 லட்சம் மோசடி செய்த 10ஊழியர்களுக்கு கடுங்காவல் தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

கடந்த 1982ம் ஆண்டு இந்த மோசடி நடந்தது. மேலூர் கூட்டுறவு வங்கியில் கருப்பணன் என்ற வாடிக்கையாளர்தான் செலுத்திய ரூ.1 லட்சம், தனது கணக்கில் ஏறவில்லை என்று வங்கியின் துணைப் பதிவாளரிடம் அப்போதுபுகார் கொடுத்தார்.

உடனே இதுபற்றி நடத்தப்பட்ட விசாரணையில் ரூ. 22 லட்சம் வரை பல மோசடிகள் நடந்துள்ளது என்பதும், இதில்17 வங்கி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 17 பேரில் 3 பேர் வங்கியின் வாரியஇயக்குநர்கள், 14 பேர் உறுப்பினர்கள்.

இந்த வழக்கு 3 வது ஜூடிசியல் நீதிமன்றத்தில் நீதிபதி திருமகள் முன்னிலையில் நடந்துவந்தது. நேற்று(வெள்ளிக்கிழமை), இந்த வழக்கில் தீர்ப்புக் கூறப்பட்டது.

நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது,

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரும் கடந்த 1973ம் ஆண்டு முதல் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட்டுவருகின்றனர் என்பது நிருபணமாகியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் செலுத்திய பணததிற்கு ரசீதைமட்டும் வழங்கிவிட்டு, அதற்கான கணக்கை வங்கியின் பதிவேட்டில் பதிவு செய்யாமல் விட்டுள்ளனர். அந்தப்பணத்தை இந்த 17 பேரும் சட்டவிரோதமாக அபகரித்துள்ளனர்.

இவர்களில் முக்கிய கு"ற்றவாளியான ராஜகோபால் இதுபோல 18 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார். அவருக்கு36 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.3,200 அபராதமும் விதிக்கிறேன்.

அதேபோல 16 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள சங்கரனுக்கு 32 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.3,200அபராதமும் விதிக்கிறேன்.

மேலும் 7 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள சர்தார் சிங்கிற்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.2,700அபராதமும் விதிக்கிறேன்.

இவ்வாறு அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் 3 ஊழியர்களுக்கும் தலா 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கில்சம்பந்தப்பட்ட 3 வங்கியின் வாரிய இயக்குநர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட மற்ற 8 ஊழியர்கள் வழக்கு நடந்துகொண்டிருக்கும் போதே இறந்துவிட்டனர். இவர்களில் 4பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மற்ற நால்வர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற