இந்தியாவில் அமெரிக்க உளவுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்:

அமெரிக்காவில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 இந்தியர்கள் குறித்து விசாரிக்கஅமெரிக்கா நாட்டு புலனாய்வு அமைப்பினரான எப்.பி.ஐ. அதிகாரிகள் குழு இந்தியா வந்துள்ளது.

இவர்கள் ஹைதராபாத் வந்திறங்கியுள்ளனர். அமெரிக்காவில் விமானத் தாக்குதல்களையடுத்து தீவிரவாதிகளுடன்தொடர்புடைய பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் ஹைதராபாத்ச்ை சேர்ந்த முகம்மத் ஜாவீத் அஸ்மத் மற்றும் அயூப் அலி கான் ஆகிய 2 இஸ்லாமியவாலிபர்களும் அடங்குவர். இவர்களது குடும்பத்தினரையும் நண்பர்களையும் விசாரிக்கத் தான் அமெரிக்காஅதிகாரிகள் இங்கு வந்துள்ளனர்.

ஹைதரபாத்தில் உள்ள ஹரிபோவில் பகுதியில் தான் இவர்களின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

அமெரிக்க அதிகாரிகளின் வருகையை முதலில் ஆந்திர போலீஸ் அதிகாரிகள் மறுத்தனர். இது மிக ரகசியமாகவைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த விவரம் வெளியில் கசிந்துவிட்டது.

ஆனால், அமெரிக்க அதிகாரிகள் இந்த வாலிபர்களின் வீட்டில் சோதனை எதையும் நடத்தவில்லை என ஆந்திரபோலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆந்திர ரகசிய போலீசாரிடம் அவர்கள் பல தகவல்களை மட்டுமேசேகரித்தனர் என அவர்கள் கூறினர்.

இதற்கிடையே தங்கள் மகன்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை என இந்தஇருவரின் பெற்றோரும் கூறிகின்றனர். சரியான ஆவணங்கள் இல்லாமல் அவர்கள் அமெரிக்கா சென்றதுமட்டுமே அவர்கள் செய்த தவறு. மற்றபடி அவர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் எந்தத் தவறும் இல்லை எனஅவர்கள் கூறினர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற