வீரப்பன் கூட்டாளிகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மைசூர்:

சந்தன மரக்கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துமைசூர் தடா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சந்தன மரக்கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் 7 பேர் போலீசாரை கொன்றது உள்ளிட்டவழக்குகளில் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் மீது மைசூர் தடா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்தவழக்கில் வீரப்பனின் கூட்டாளிகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தடாநீதிமன்ற நீதிபதி டி.கிருஷ்ணபப்பா தீர்ப்பளித்தார்.

ஆயுள் தண்டனை பெற்றவர்கள்:

சைமன், சேகர், பில்வேந்திரா, வாட்ச்மேன் காளியப்பா, மேகே மாதையா,ஞானபிரகாஷ் மற்றும் வீராசாமி.

வேறு பல குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த மேலும் 6 பேர் போதியகாலம் சிறையில் கழித்து விட்டதால் அவர்களை விடுதலை செய்து நீதிபதிதீர்ப்பளித்தார்.

தடா வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த மற்றவர்களுக்கு 2 ஆண்டு காலம் கடுங்காவல்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற