பாக். ஆதரவாளர் ஆப்கான் ராணுவ புதிய தளபதியாக நியமனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் கமாண்டர்-இன்-சீப்பாக தனது கூட்டாளியான ஜலாலுதீன் ஹக்கானியை தலிபான் அமைப்பின்தலைவர் முல்லா முகம்மத் ஒமர் நியமித்துள்ளார்.

ஜலாலுதீன் பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐக்கு மிக நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவை எதிர்த்துப் போரிட ராணுவத்தைத் தயார் செய்து வரும் ஒமர் அதன் ஒரு படியாக ஜலாலுதீனை ராணுவத்தலைவராக்கியிருக்கிறார்.

சோவியத் யூனியனை எதிர்த்துப் போரிட்ட மிக முக்கிய ராணுவ கமாண்டர்களில் ஜலாலுதீனும் ஒருவர்.

பாகிஸ்தானில் இருந்து 260 கி.மீ. தூரத்தில் உள்ள கோஸ்ட் நகரில் தனது ராணுவத் தலைமையகத்தை அமைத்துத் கொள்ளூமாறும்ஜலாலுதீனுக்கு ஒமர் உத்தரவிட்டுள்ளார்.

ஜலாலுதீனின் கீழ் சுமார் 60,000 தலிபான் ராணுவத்தினர் செயல்பட்டு வருகின்றனர். இவரது குழுவிடம் விமானங்களைத் தாக்கும்ஸ்டிங்கர் மிசைல் எனப்படும் ஏவுகணைகளும் உள்ளன.

ஆப்கானிஸ்தானின் மிகப் பெரும்பான்யாைக உள்ள முக்கிய பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் ஜலாலுதீன்.

ஜலாலுதீனை ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதன் மூலம் தலிபான் அரசின் முக்கிய முடிவுகள் பாகிஸ்தானுடன் பேசிய பிறகேஎடுக்கப்படுகின்றன என்பது தெளிவாகிறது என இந்திய உளவுப் பிரிவுகள் கூறுகின்றன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற