பின்லேடன் விவகாரம்: தலிபான்-பாக் பேச்சு மீண்டும் தோல்வி

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

ஒசாமா பின் லேடனை ஒப்படைக்கக் கோரி ஆப்கானிஸ்தான் சென்று தலிபான்தலைவர்களுடன் இரண்டாவது முறையாக பேச்சுவார்த்த நடத்திய பாகிஸ்தான்தூதுக்குழுவின் கடைசி முயற்சி தோல்வி அடைந்து விட்டது.

அமெரிக்கா மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் முக்கிய குற்றவாளியாககருதப்படுபவர் சர்வதேச தீவிரவாதியான ஒசாமா பின் லேடன். இவருக்குஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் அரசு அடைக்கலம் கொடுத்துள்ளது.

இவரை ஒப்படைக்குமாறு தலிபானை கேட்டுக் கொண்டது அமெரிக்க அரசு. ஆனால்தலிபான் அந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டது. இதையடுத்து ஆப்கானிஸ்தான்மீது போர் தொடுக்க அமெரிக்கா முடிவு செய்தது. அதற்கு உலக நாடுகள் பலவும்ஆதரவு தெரிவித்துள்ளன. பாகிஸ்தானும் ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் பாகிஸ்தான் உளவுத் துறையானஐ.எஸ்.ஐயின் தலைவர் தலைமையில் பாகிஸ்தான் குழு ஒன்று ஆப்கானிஸ்தான்சென்று ஒசாமா பின் லேடனை ஒப்படைக்க வேண்டும் என்று வற்புறுத்தியது. ஆனால்அதற்கு தலிபான் மறுப்பு தெரிவித்தது.

அப்போது ஆப்கானிஸ்தானில் மதத் தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர் .அவர்கள் பின் லேடன் தானாக முன் வந்து ஆர்கானிஸ்தானை விட்டு வெளியேறவேண்டும் என்று கூறினர்.

இந்த நிலையில் அமெரிக்க ராணுவ குழு பாகிஸ்தான் வந்து ஆப்கானிஸ்தான் மீதுபோர் தொடுப்பது குறித்து ஆலோசனை நடத்திவிட்டுச் சென்றது.

இதையடுத்து மீன்டும் ஒரு குழு ஆப்கானிஸ்தானுக்கு சென்றது. இந்த குழுவில்புலனாய்வுப் பிரிவு தலைவர் (ஐ.எஸ்.ஐ. தலைவர்) முகம்மத் அகமதுவும் இடம்பெற்றிருந்தார். தலிபானுக்கு ஆதரவு அளிக்கும் மதக கட்சிகளின் தலைவர்கள் இதில்இடம் பெறவில்லை.

இந்த குழுவினர் ஆப்கானிஸ்தானில் உள்ள காண்டஹார் சென்று தலிபான் தலைவர்முல்லா முகமது உமரை சந்தித்து பேசினார். அப்போது அமெரிக்கா ஆப்கானிஸ்தான்மீது போர் தொடுப்பதை தடுக்க வேண்டும் என்றால் பின் லேடனை உடனேஒப்படைக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

முல்லா முகமது உமரை பாகிஸ்தான் தூதுக்குழுவினர் சந்தித்து பேசியதை பாகிஸ்தானின்வெளியுறவுத் தொடர்பு அமைசக்கத்தின் செய்தித் தொடர்பாளர் ரியாஸ் முகமது கான்உறுதி செய்தார்

ஆனாலும் பேச்சுவார்த்தை குறித்த விவரங்களை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.பாகிஸ்தான் தூதுக்குழுவினர் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி அடைந்து விட்டதாகஅமெரிக்காவின் சி.என்.என். தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற