இந்திய கிரிக்கெட் அகாதமியின் புதிய இயக்குனர் காவஸ்கர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்திய கிரிக்கெட் அகாதமியின் புதிய இயக்குனராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில்காவஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவர் தேர்தலில் பிசிசிஐன்தவைவராக இருந்து வந்த ஏ.சி. முத்தையாவுக்கும், ஜக்மோகன் டால்மியாவுக்கும் இடையே கடும் போட்டிநிலவியது. இறுதியில் டால்மியா வெற்றி பெற்றார்.

இந்நிலையில், இதுவரை இந்திய கிரிக்கெட் அகாதமியின் இயக்குனராக இருந்த ராஜ்சிங் துங்கர்பூரை நீக்கிவிட்டுபுதிய இயக்குனராக சுனில் காவஸ்கரை டால்மியா இன்று நியமித்துள்ளார்.

கடந்த ஆண்டு காவஸ்கர் இந்திய கிரிக்கெட் அகாதமியின் ஆலோசராக இருந்து வந்தார்.அவருக்கும்துங்கர்பூருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காவஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார்என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் அணியை தேர்வு செய்யும் தேர்வு குழுவின் 5 பேர் கு ழுவும் ஞாயிற்றுக்கிழமைநியமிக்கப்பட்டது.

முன்பு செலக்ஷன் கமிட்டியில் இருந்தவர்கள் தொடர்ந்து அந்த பதவியில் நீடிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால் தென்மண்டல செலக்ஷன் கமிட்டி தலைவராக இருந்த சென்னையைச் சேர்ந்த டிஏ.சேகர் நீக்கப்பட்டுஅவருக்கு பதிலாக ஐதராபாதைச் சேர்ந்த ஷிவலால் யாதவ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டி.ஏ. சேகர் முத்தையாவின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்து போர்டே மேற்கு மண்டலம் தலைவராகவும், மதன்லால் வடக்கு மண்டல தலைவராகவும், அசோக்மல்ஹோத்ரா கிழக்கு மண்டல தலைவராகவும், சஞ்ஜய் ஜக்தாலே மத்திய மண்டலம் தலைராகவும் தொடர்ந்துநீடிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற