இங்கிலாந்து நிருபரிடம் தலிபான் அரசு விசாரணை

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

தலிபான்கள் பிடித்து வைத்திருக்கும் இங்கிலாந்து பெண் பத்திரிக்கையாளரிடம் விசாரணை நடத்தஜலாலாபாத்திற்கு ஒரு விசாரணைக் குழுவை அனுப்பி வைத்துள்ளது தலிபான் அரசு.

லண்டனில் இருந்து வெளியாகும் "சண்டே எக்ஸ்பிரஸ்" என்ற பத்திரிக்கையின் பெண் நிருபர் யோன் ரிட்லிஎன்பவரையும், அவருடைய ஆப்கான் கூட்டாளிகள் 2 பேரையும் கடந்த வெள்ளிக்கிழமை தலிபான்கள் கைதுசெய்யதனர்.

இவர்கள் தலிபான்களின் நடவடிக்கையை உளவு பார்க்க வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் இவர்களைத் தலிபான்படையினர் கைது செய்தனர். தற்போது ரிட்லி ஜாலாபாத்தில் உள்ள ஒரு தனி வீட்டில் காவலில்வைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு தினமும் 4 அல்லது 5 முறை உணவும், சிகரெட்டுகளும் வழங்கப்படுவதோடு, நல்ல சுத்தமான துணிகளும்கொடுக்கப்பட்டு மரியாதையுடன் வைக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் அவருடன் கைதுசெய்யப்பட்ட 2 ஆப்கானிஸ்தானியர்களின் நிலையைப் பற்றி தகவல் எதுவும் இல்லை.

இந்நிலையில் ரிட்லி ஆப்கானுக்குள் உண்மையிலேயே செய்தி சேகரிப்பதற்காகத் தான் நுழைந்தாரா அல்லது வேவுபார்க்க வந்தாரா என்று விசாரணை நடத்த தலிபான்கள் முடிவுசெய்துள்ளனர்.

ஏனென்றால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா, ஆப்கான் மீது தாக்குதல் நடத்தத் தயாரானது. அப்போது,ஆப்கானில் உள்ள அனைத்து வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் மற்றும் டி.விக்களின் நிருபர்கள் தங்களுடையஅலுவலகத்தைக் காலி செய்து விட்டு ஆப்கானை விட்டு வெளியேறவேண்டும் என்று தலிபான்கள் அறிவித்தனர்.

இதையடுத்து சி.என்.என். மற்றும் பி.பி.சி. உள்ளிட்ட அனைத்து செய்து நிறுவனங்களும் ஆப்கானை விட்டுவெளியேறி விட்டன.

இந்நிலையில் காவலில் வைக்கப்பட்டுள்ள ரிட்லியிடம் விசாரணை நடத்துவதற்காக, தலிபான்களின் உளவுப் பிரிவுஒன்று ஜலாலாபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு எவ்வளவுநாள் விசாரணை நடத்தும் என்பதுகுறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற