எதிர்ப் படையிடமிருந்து மாவட்டத்தை கைப்பற்றிய தலிபான்

Posted By: Super
Subscribe to Oneindia Tamil

இஸ்லமாபாத்:

தன்னை எதிர்த்துப் போராடி வரும் எதிர்ப் படையினரான நார்த்தர்ன் அலையன்ஸ்படைகளுடன் நடைபெற்ற சண்டையில் மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள குவாடிஸ்மாவட்டத்தை மீண்டும் கைப்பற்றியுள்ளதாக தலிபான் கூறியுள்ளது.

கடந்த சில வாரங்களாக ஆப்கானிஸ்தானின் ஆளும் தலிபான் படைகளுக்கும்அவர்களை எதிர்த்து வரும் நார்த்தர்ன் அலையனஸ் படைகளுக்கும் இடையே கடும்சண்டை நடந்து வருகிறது ஆனாலும் நார்த்தர்ன் அலையன்சால் குறிப்பிடத்தக்கமுன்னேற்றத்தை பெறமுடியவில்லை.

தலிபான் படையுடன் ஒப்பிடும் போது நார்த்தர்ன் அலையன்ல் படை வீரர்களின்எண்ணிக்கையும் குறைவு. ஆயுத பலமும் குறைவு. ஆனாலும் தலிபான் படையிலிருந்தபலர் தங்களுக்கு ஆதரவு அளித்து தங்களுடன் இணைந்து விட்டதாக நார்த்தர்ன்அலையன்ஸ் கூறி வருகிறது.

இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) நடந்த கடும் சண்டையில் நார்த்தர்ன்அலையன்ஸ் கைப்பற்றியிருந்த குவாடிஸ் மாவட்டத்தை தலிபான் படைகள்கைப்பற்றியுள்ளதாக ஆப்கானிஸ்தான் இஸ்லாமிக் பிரஸ் (ஏ.ஐ.பி) தெரிவித்துள்ளது.

இன்று காலை 3 மணி நேரம் நடந்த கடும் சண்டைக்கு பின் குவாடிஸ் மாவட்டத்தைதலிபான் தன் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது என்று அந்த செய்தியில்மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற மாதம் 11ம் தேதி அமெரிக்கா மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் முக்கியகுற்றவாளியாகக் கருதப்படும் ஒசாமா பின் லேடனை பிடிக்க அமெரிக்கா நடத்தவுள்ளபோருக்கு அமெரிக்காவுக்கு ஆதரவு தருவதாக நார்த்தர்ன் அலையனஸ் கூறியுள்ளது.தலிபான் அரசை அகற்ற இது நல்ல வாய்ப்பு என்று நார்த்தர்ன் அலையன்ஸ்கருதுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற