சென்னை ரயில் நிலையத்தில் 27 அழகிகள் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளியூர் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக நின்றுகொண்டிருந்த 27விலை மாதர்கள் போலீசார் கைது செய்தனர்.

சென்னை ரயில் நிலையத்தில் சங்கிலி பறிப்பு, மற்றும் ஜேப்படித் திருடர்களைப் தடுப்பதற்காக போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக 2 பெண்கள் பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரித்ததில், அவர்கள் 2 பேரும் விலை மாதர்கள் என்பது தெரியவந்தது.

உடனே இதுபோல ரயில் நிலையத்தின் மற்ற பகுதிகளில் நிற்கும் விலை மாதர்களையும் போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

மொத்தம் 10 பேரை இவ்வாறு போலீசார் கைது செய்தனர்.

இதுபோல புறநகர் ரயில்களில் பயணித்துக் கொண்டே வாடிக்கையாளர்களை வசப்படுத்தி அழைத்துச் செல்லும்அழகிகள் 17 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற