காஷ்மீர் விரைந்தார் அத்வானி

Posted By:
Subscribe to Oneindia Tamil

காஷ்மீர்:

தீவிரவாதிகள் தாக்குதலையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி காஷ்மீர் விரைந்தார்.

அங்கு ராணுவ அதிகாரிகளுடனும் காவல்துறை அதிகாரிகளுடனும் அத்வானி ஆலோசனை நடத்துகிறார்.

தீவிரவாதிகளின் தாக்குதல்களை முறியடிப்பது குறித்தும், தற்காப்பு நடவடிக்கைகளுக்குப் பதில் தாக்குதல் நடவடிக்கைகளில்பாதுகாப்புப் படைகள் ஈடுபடுவது குறித்தும் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

ஜம்மூ-காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை குறித்தும், சட்டம்-ஒழுங்கு நிலைமையையும் அவர் ஆராய்வார்.

அத்வானியுடன் மூத்த உள்துறை, ராணுவ அதிகாரிகளும் காஷ்மீர் விரைகின்றனர்.

அம் மாநிலத்தின் அனைத்துக் கட்சி எம்.எல்.ஏக்களுடனும் அத்வானி பேசுவார்.

காஷ்மீர் சட்டசபை மீது தாக்குதல் நடத்திய ஜெயிஸ்-ஏ-முகம்மத் அமைப்பின் தலைவர் மெளலானா மசூத் அஸாரை உடனடியாகஇந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என அத்வானி ஏற்கனவே பாகிஸ்தானிடம் கோரியுள்ளார்.

இந்த மசூத் அஸாரை விடுவிப்பதற்காகத் தான் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை பாகிஸ்தான் தீவிரவாதிகள்ஆப்கானிஸ்தானுக்குக் கடத்திச் சென்றனர் என்பது நினைவு கூறத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற