5 மாநகராட்சி மேயர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று தொடங்கியது.சென்னையைத் தவிர 5 மாநகராட்சிகளின் மேயர் பதவிக்காக வேட்பு மனுத்தாக்கல்செய்த அனைவரின் மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டன.

6 மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 16 மற்றும் 18 ஆகியதேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் 1ம்தேதியுடன் முடிந்தது. தற்போது மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்த 18 பேரின்மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. கோவை மாநகராட்சிக்கு மனு செய்த 19பேருடைய மனுக்களும், திருச்சி மாநகராட்சிக்கு தாக்கல் செய்திருந்த 10 பேரின்மனுக்களும், சேலம் மாநகராட்சிக்குத் தாக்கல் செய்திருந்த 15 மனுக்களும், நெல்லைமாநகராட்சிக்கு தாக்கல் செய்திருந்த 12 பேருடைய மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டன.

சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள்பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. பிற பதவிகளுக்குரிய மனுக்களும் பரிசீலிக்கப்பட்டுவருகின்றன.

கோவையில் இரண்டு பஞ்சாயத்து யூனியன் வார்டுகளுக்கு யாருமே வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை. மாலை 3 மணிக்கு பரிசீலனை முடிகிறது.

5ம் தேதிக்குள் மனுக்களை வாபஸ் பெற வேண்டும். அன்று மாலை இறுதி வேட்பாளர்பட்டியல் வெளியிடப்படும். அத்தோடு, யார் யாருக்கு எந்த சின்னம்ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரமும் வெளியிடப்படும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற