4 உயிர்களை காவு வாங்கிய கடன் தொல்லை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அருகே கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷ ஊசி போட்டுத் தற்கொலை செய்துகொண்டனர்.

சென்னை புறநகரான மாதவரம்-மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (28). அன்னபூரனி (25) என்ற மனைவியும், சுகுமார்(3), பிரியங்கா (2) என்ற குழந்தைகளும் இவர்களுக்கு உண்டு.

கன்னியப்பன் ஏராளமான அளவில் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அதைத் திருப்பிக் கட்ட முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.கடனைக் கட்ட முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்த அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்குவந்தார். தனது முடிவை மனைவியிடம் கூறினார். அவரும் அதை கண்ணீருடன் ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து அனைவருக்கும் விஷ ஊசியைப் போட்ட கன்னியப்பன் தானும் அதைப் போட்டுக் கொண்டார். சிறிது நேரத்தில்கன்னியப்பனும், குழந்தைளும் பரிதாபமாக இறந்தனர். அன்னபூரனி உயிருக்குப் போராடி வந்தார். அவரை அரசு ஸ்டான்லிமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அன்னபூரனியும் இறந்து விட்டார்.

மாதவரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற