For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாளை இந்தியா வருகிறார் அமெரிக்க அமைச்சர்

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

அமெரிக்க பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் நேற்று வாஷிங்டனில் இருந்து பாகிஸ்தான்புறப்பட்டார். பாகிஸ்தானில் இருந்து அவர் நாளை இந்தியா வருகிறார்.

அதே போல அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் டோனால்ட் ரம்ஸ்பீல்டும் இன்று அமெரிக்காவில் இருந்துஐரோப்பா புறப்பட்டார். நேட்டோ நாடுகளுடன் இந்திய-பாகிஸ்தான் விவகாரம் தொடர்பாக விவாதித்துவிட்டுவரும் 9ம் தேதி அவர் டெல்லி வருகிறார்.

ரிச்சர்ட் ஆர்மிடேஜ் மூலமாகத் தான் கார்கில் ஊடுருவல் விவகாரத்தில் பாகிஸ்தானை அமெரிக்கா நெருக்கியது.பாகிஸ்தான் ராணுவம், ஐ.எஸ்.ஐ., தீவிரவாதிகள் நட்புறவு குறித்த முழு விவரம் தெரிந்தவர் ஆர்மிடேஜ். முஷாரபைகையாள இந்த முன்னாள் குத்துச் சண்டை வீரரும் முன்னாள் அமெரிக்க ராணுவ அதிகாரியுமான இவர் தான்சரியான ஆள் என அந் நாடு நினைக்கிறது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் வெடிக்கும் சூழ்நிலை நிலவும் இந்த நேரத்தில் அவரது வருகை மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

போரை தவிர்க்க அமெரிக்கா தீவிரம்:

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போரைத் தவிர்க்க முடியும் என நம்புவதாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்கூறியுள்ளார்.

இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஆரி பிஷ்ஷர் கூறுகையில்,

போரைத் தவிரத்துவிடலாம் என புஷ் நம்புகிறார். இதனால் தான் பாதுகாப்பு அமைச்சர் டோனால்ட்ரம்ஸ்பீல்டையும், துணை பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜையும் அங்கு அனுப்புகிறார்.

போர் நடந்தால் அது பேரழிவை ஏற்படுத்தும். இந்திய, பாகிஸ்தான் தலைவர்களுடன் பேசும் முன் ரஷ்ய அதிபர்புடின், அமெரிக்க அதிபருடனும் பேசினார். புடினுக்கு புஷ் முழு ஆதரவைத் தெரிவித்தார்.

எல்லையில் பதற்றம் குறையாமல் இருந்து வருவது உலக நாடுகளை கவலையடையச் செய்துள்ளது.தீவிரவாதிகளை பாகிஸ்தான் நிறுத்துவதாகக் கூறியது. இப்போது அதை செயலில் காட்டி வருவதாகநினைக்கிறோம். ஆனால், இதனால் தீவிரவாதிகள் எல்லை தாண்டுவது நின்றுவிட்டதாகக் கூற முடியாது என்றார்.

இந்தியாவுக்கு ஆதரவு:

தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைவது நின்றால் மட்டுமே தனது படைகளை வாபஸ் பெறுமாறு இந்தியாவைநாங்கள் வற்புறுத்துவோம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் கூறியுள்ளார்.

முதலில் தீவிரவாதிகளைத் தடுத்து நிறுத்துமாறு பாகிஸ்தான் அதிபர் முஷாரபிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளேன்.அதை அவர் செய்தால் மட்டுமே இந்தியாவிடம் எதையும் வற்புறுத்த முடியும்.

கஜாகிஸ்தானில் வாஜ்பாயும் முஷாரபும் சந்தித்துக் கொள்ளாதது வருத்தம் தரவில்லை. இந்த விஷயத்தில் அந்தத்தலைவர்களின் முடிவு தான் இறுதியானது.

இந்தியாவிடமும் சிறிது மாற்றம் தெரிகிறது. தீவிரவாதிகளை நிறுத்தினால் உடனே படை வாபஸ் செய்ய அந் நாடுதயாராக உள்ளது மகிழ்ச்சி தருகிறது என்றார்.

பாக். திரும்பிய முஷாரப் புலம்பல்:

இந் நிலையில் கஜாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பிய பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்,இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் தணியவில்லை என்றார்.

அவர் கூறுகையில், ஆனால் இது இன்னும் மோசமாகாது என்று நம்புகிறேன். தீவிரவாதிகள் ஊடுவலைநிறுத்திவிட்டோம். இதை எல்லையில் நின்றுள்ள இந்திய ராணுவம் மூலம் உறுதி செய்ய முடியும். காஷ்மீரில்சுதந்திரப் போராட்டம் நடந்து வருகிறது. ஆனால், அங்கு என்ன நடந்தாலும் பாகிஸ்தானை குறை கூறுகிறார்கள்.

எங்களுக்கு போரில் விரும்பமில்லை. ஆனால், எங்கள் மானம், மரியாதையைக் காக்க வேண்டிய அவசியம்உள்ளது. அணு ஆயுதப் போர் ஏற்பட வாய்ப்பேயில்லை.

பட்டியல் இருக்கிறதா?

இந்தியாவில் தாக்குதலில் ஈடுபட்ட 20 தீவிரவாதிகளை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் கோரினோம். அதேபோல இந்தியாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இருப்பதாக கூறுகிறார்கள். அப்படிப்பட்ட பட்டியல் இருந்தால்அதை எங்களிடம் தரலாம் என பாகிஸ்தானிடம் இந்தியா கூறியுள்ளது.

துருக்கி கோரிக்கை:

போரை இந்தியாவும் பாகிஸ்தானும் எப்பாடுபட்டாவது தவிர்க்க வேண்டும் என துருக்கி கூறியுள்ளது.

ஐ.நா. எச்சரிக்கை:

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் வந்தால் அதனால் ஒட்டுமொத்த ஆசியாவும் பாதிக்கப்படும் என ஐ.நா.பொதுச் செயலாளர் கோபி அன்னான் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X