For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏதாவது செய்வாரா ஏ.கே. மூர்த்தி?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ஏ.கே. மூர்த்திக்கு மத்திய ரயில்வே இணை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதுகுறித்து அக்கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழகத்திற்குக் கிடைத்துள்ளஇந்த ரயில்வே துறை மூலம் நம் மாநிலத்திற்கு அவர் ஏதாவது செய்வாரா என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையேஎழுந்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை மத்திய அமைச்சரவையில் முக்கிய துறைகள் கிடைப்பது எப்போதாவதுதான். அந்தவகையில் ஜவஹர்லால் நேரு அமைச்சரவையில் ஓ.வி. அழகேசன் ரயில்வே துறை இணை அமைச்சராக பதவிவகித்தார். அதற்குப் பிறகு இப்போது தான் தமிழகத்திற்கு ரயில்வே அமைச்சகம் கிடைத்துள்ளது.

தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் கர்நாடகம், கேரளம்தான் ரயில்வே அமைச்சகத்தால் அதிக பலன்களைப்பெற்ற மாநிலங்களாகத் திகழ்கின்றன. ஆனால் தமிழகத்தின் நிலை இந்த விஷயத்தில் மிகப் பரிதாபமாகவேஉள்ளது.

பக்கத்து மாநிலங்களில் எல்லாம் ரயில்கள் அலை, அலையாக அறிமுகப்படுத்தும் போது தமிழகத்திற்கு ஒரு ரயில்,இரண்டு ரயில் என விரல் விட்டு எண்ணும் அளவிலேயே வருடம்தோறும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்திலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை 39 எம்.பிக்கள் லோக் சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.ஆனால் இவர்களால் பத்து ரயில்களாவது தமிழகத்திற்கு வந்திருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்ற பதில்தான்வரும்.

எப்போதுமே ரயில்வே துறையைப் பொறுத்தவரை தமிழகம் முறையாகக் கவனிக்கப்படுவதில்லை. பல ரயில்வேதிட்டங்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்படாத காரணத்தால் முடங்கிப் போய்க் கிடக்கின்றன.

சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை ரயில் நிலையம் வரை அமைக்கப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்த பறக்கும்ரயில் திட்டம் மயிலாப்பூர் வரை தான் முடிந்து அப்பாதையில் ரயில்கள் போய்க் கொண்டுள்ளன.

மயிலாப்பூரிலிருந்து வேளச்சேரி வரையிலான ரயில் பாலம் மற்றும் பாதை அமைக்கும் பணி ஆமை வேகத்தில்நடந்து கொண்டுள்ளது. இந்தப் பணிகள் எப்போது முடியும் என்ற எதிர்பார்ப்பு சென்னை மக்களிடையே பலஆண்டுகளாகவே இருந்து வருகிறது.

ஆனால் கர்நாடகம், கேரளம் தங்களுக்கு எப்போதெல்லாம் ரயில்கள் தேவைப்படுகிறதோ, எந்த ஊர்களுக்குஎல்லாம் ரயில்கள் தேவைப்படுகிறதோ அவற்றை உடனடியாக நிறைவேற்றிக் கொண்டுள்ளன. இன்னும் சொல்லப்போனால் தங்களது தேவைகளை மிரட்டியாவது அவை சாதித்து வருகின்றன.

பா.ஜ.க. அமைச்சரவையில் கேரளாவுக்கு ஒரு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. ஓ. ராஜகோபால்ரயில்வே இணை அமைச்சரானார். அவர் பதவியேற்ற பின் பல புதிய ரயில்கள் கேரளாவுக்குக் கிடைத்துள்ளது.இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 4 புதிய ரயில்கள் கேரளாவுக்குக் கிடைத்துள்ளன. பாலக்காட்டிலிருந்துமங்களூருக்கும் புதிதாக ஒரு ரயில் விடப்பட்டுள்ளது.

அதேபோல, கர்நாடகத்திற்கும் இந்த ஆண்டு புதிதாக 3 ரயில்கள் கிடைத்துள்ளன. ஆனால் தமிகத்திற்கு எத்தனைரயில்கள் கிடைத்துள்ளன தெரியுமா? இந்தக் கேள்விக்கு விடை பூஜ்ஜியம் தான்.

பெங்களூரிலிருந்து பங்காருப்பேட்டை வரை சென்ற ரயில் ஜோலார் பேட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.திருவனந்தபுரத்திலிருந்து நெல்லை, மதுரை வழியாக சென்னைக்கு ஒரு ரயில் விடப்பட்டுள்ளது. அவ்வளவுதான்.ஒவ்வொரு ஆண்டும் கேரளம், கர்நாடகம் புதுப் புது ரயில்களைப் பெற்றுக் கொண்டுள்ள நிலையில், தமிழகத்தில்மட்டும் நீட்டிப்புகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. ஏன் இந்த ஓரவஞ்சனை என்று பொதுமக்களுக்குப்புரியவில்லை. இதைத் தட்டிக் கேட்க அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்று சேர மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பும்மக்களிடையே உள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த மூர்த்தி இப்போது ரயில்வே இணை அமைச்சராகியுள்ளார். இனிமேலாவது தமிழகத்திற்குரயில்வே திட்டங்கள் முறையாகவும், நியாயமாகவும் கிடைக்குமா என்று தெரியவில்லை.

கர்நாடகத்தைச் சேர்ந்த ஜாபர் ஷெரீப் ரயில்வே அமைச்சராக இருந்தபோது கணக்கில் அடங்காத அளவுக்குஏராளமான ரயில்களை கர்நாடகத்திற்காக ஒதுக்கினார். தனது மகள் தமிழகத்தில் படித்து வந்ததால் அவருக்குவசதியாக பெங்களூரிலிருந்து நாகப்பட்டினம் வரை ஒரு ரயிலையே விட்டார். அந்த அளவுக்கு அவர் நினைத்ததைசாதிக்க முடிந்தது.

கேரளத்தைச் சேர்ந்த ராஜகோபால் ரயில்வே இணை அமைச்சராக இருந்தபோது கேரளத்திற்கு பல புதியரயில்களைக் கொண்டு வந்தார். சின்னச் சின்ன ஊர்களுக்குக் கூட புதிய ரயில்கள் விடப்பட்டன. பல ரயில்வேத்திட்டங்களுக்கு உடனடியாக நிதி ஒதுக்கப்பட்டது.

தமிழகத்தின் மூர்த்தி இப்படியெல்லாம் செயல்பட்டு நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வரும் தமிழகத்திற்கு நீதிகிடைக்கும் வகையில் பல புதிய ரயில்களையும், முடங்கிக் கிடக்கும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவும் உதவவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக உள்ளது.

பாமக வைச் சேர்ந்தவர் என்பதால் தனது கட்சிக்கு செல்வாக்கு உள்ள வட மாவட்டங்களில் மட்டும் அவர் கரிசனம்காட்டிவிடக் கூடாது. தமிழகம் முழுமையும் அவரது பெயரை நினைவு கூறும் வகையில் செயல்பட வேண்டும் என்றுநடுநலையாளர்கள் கருதுகிறார்கள்.

என்ன செய்யப் போகிறார் ஏ.கே. மூர்த்தி? பொறுத்திருந்து பார்ப்போம். இன்று சென்னை வருகைஇதற்கிடையே மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு இன்று முதல் முறையாகச் சென்னை வருகிறார் மூர்த்தி.சென்னை விமான நிலையத்தில் மாநில பாமக தலைவரும் எம்.எல்.ஏவுமான ஜி.கே. மணி தலைமையில்அக்கட்சியினர் சிறப்பான வரவேற்பு கொடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X