• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆட்டம் காணும் மதுரை திமுக

By Staff
|

மதுரை:

மதுரை திமுகவில் இத்தனை நாட்களாக "சோற்றுக்குள் மறைந்து கொண்டிருந்த பெருச்சாளி" வெளியே வரஆரம்பித்து விட்டது. ஸ்டாலின் மற்றும் அழகிரி ஆதரவாளர்களின் பகிரங்க மோதலால் தென் மாவட்டங்களில்திமுக ஆட்டம் கண்டுள்ளது.

அழகிரியின் தொல்லை தாங்க முடியவில்லை. அவருடன் சமரசமாகப் போகத் தயாரில்லை என்று கூறி மூத்ததலைவர்களில் ஒருவரான பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் திமுகவிலிருந்து விலகப் போவதாக பகிரங்கமாகஅறிவித்து விட்டார்.

மதுரை திமுகவில் கோஷ்டிப் பூசல் என்பது நேற்று, இன்று என்றில்லை. பல ஆண்டு காலமாக நீடித்து வருகிறதுதான் என்றாலும் இப்போதைய பூசல் மாநில அளவில் திமுகவில் சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்றுகருதப்படுகிறது.

திமுகவைப் பொறுத்தவரை தென் மாவட்டங்களில் ஸ்டாலின் ஆதரவாளர்கள் மற்றும் அதிருப்தியாளர்கள், அழகிரிஆதரவாளர்கள் மற்றும் அதிருப்தியாளர்கள் என்ற நிலை உள்ளது.

Stalinகுறிப்பாக மதுரைக்கு அந்தப் பக்கத்திலிருந்து அடிக்கடி கோஷ்டிப் பூசல் வெடித்துக் கொண்டேயிருக்கும். இருகோஷ்டியினரும் சென்னைக்கு ஓடி வருவார்கள். கருணாநிதியிடம் அறிவுரையும், சில சமயம் திட்டும் வாங்கிக்கொண்டு திரும்ப ஊருக்குப் போய் மறுபடியும் அரசியல் நடத்துவார்கள்.

ஸ்டாலினையும் அழகிரியையும் அட்ஜஸ்ட் செய்து கொண்டு கருணாநிதி இத்தனை காலம் கட்சியை நடத்திவருவது தமிழக மக்களுக்கு ஒன்றும் புதிய விஷயம் இல்லை. ஆனால் இப்போது நிலைமை கொஞ்சம்கலவரமாகவே இருப்பதாகத் தெரிகிறது.

மதுரை கஞ்சித் தொட்டிக் கலவரம் காரணமாக கைதாகி, ஜாமீனில் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில்தங்கியிருக்கும் முன்னாள் சபாநாயகர் பழனிவேல்ராஜன் கூறுகையில்,

அழகிரியை கட்டுப்படுத்த கருணாநிதி மேலும் தவறினால் நான் மட்டுமல்ல, பொதுச் செயலாளர் அன்பழகன்,பொருளாளர் ஆற்காடு வீராசாமி ஆகியோரும் விலகி விடுவார்கள். இதுதொடர்பாக அவர்களிடமும் நான் பேசிவிட்டேன் என்று புதிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

Alagiriபி.டி.ஆரின் பேச்சு திமுக வட்டாரத்தில் மட்டுமல்லாது பிற கட்சிகளின் மத்தியிலும் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது அழகிரியின் ஆட்கள் செய்த குளறுபடிகள்,குழிபறிப்புகள் காரணமாக திமுகவுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

அழகிரியின் தீவிரஆதரவாளராக இருந்த மிசா பாண்டியன் ஒரு கொலை வழக்கில் சிக்கிக் கொண்டபோது,அவரைக் காப்பாற்றுமாறு அழகிரி பலமுறை வேண்டிக் கேட்டும் கூட திமுக தலைமை (அப்போது ஆட்சியில்இருந்தது) அதைக் கண்டு கொள்ளாததால், மிசா பாண்டியன் அதிமுகவுக்குத் தாவி விட்டார்.

மேலும் மதுரை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் சுயேச்சையாக நின்ற மிசா பாண்டியன் அதில் வெற்றியும்பெற்றார்.

ஸ்டாலின் ஆதரவாளர்கள் மதுரை திமுகவில் அதிகம் இல்லை. தேனி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும்அழகிரியின் ஆதரவாளர்களே அதிகம். ஆனால், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்றமாவட்டங்களில் அழகிரிக்கு பெரிய அளவில் ஆதரவாளர்கள் இல்லை. என்றாலும் அவர்களில் சிலர் மறைமுகமாகஅழகிரிக்கு ஆதரவாக உள்ளனர் என்று கூறப்படுகிறது.

Palani Vel Rajanஒருவேளை பி.டி.ஆர். தலைமையில் மதுரை திமுகவினர் பிரிந்து சென்றால் அவருடன் மதுரை மாநகர மேயர் செ.ராமச்சந்திரன், தேனி மாவட்ட திமுகவினர் உள்ளிட்டோர் பிரிந்து செல்வார்கள் என்று தெரிகிறது.

அப்படி நடந்தால் வரும் காலத்தில் நிச்சயம் திமுகவுக்கு பாதிப்பு இருக்கலாம். தற்போதைக்கு தென்மாவட்டங்களில் திமுகவின் கெளரவமான, மூத்த தலைவராக பழனிவேல்ராஜன் மட்டுமே உள்ளார். அவரைக் கைநழுவ திமுக அனுமதிக்குமானால், அது திமுகவின் கெளரவத்திற்கே இழப்பாகும்.

இந்த முறையாவது சற்று சீரியஸாக இந்தப் பிரச்சினையைக் கருணாநிதி கையாண்டு நல்ல முடிவை எட்டவேண்டும் என்று திமுக தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X