For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடத்தலுக்கான காரணம் என்ன?

Google Oneindia Tamil News

பெங்களூர்:

நாகப்பாவை வீரப்பன் கடத்திச் சென்றதற்கு 4 முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன.

காரணம்-1:

வீரப்பனை மிகக் கடுமையாக விமர்சித்து வந்தவர் நாகப்பா. வீரப்பனின் காட்டுப் பகுதியை ஒட்டியுள்ள ஹானூர் தொகுதியில் இருந்துசட்டசபைக்கு தேர்வாகி அமைச்சரானவர் நாகப்பா. இவர் அமைச்சரான பிறகு வீரப்பனுக்கு பணம் வந்து கொண்டிருந்த கிரானைட்குவாரிகளை முடச் செய்தார். அப்போது முதல் இவர் மீது கடும் கோபத்தில் இருந்தான் வீரப்பன்.

மேலும் இப்போதைய கர்நாடக அமைச்சராக உள்ள ராஜூ கெளடாவையும் வீரப்பனையும் தொடர்புபடுத்தி பேசி வந்தார். வீரப்பனின்கூட்டாளி தான் ராஜூ கெளடா என்று கூட கூறி வந்தார். ஹானூர் தொகுதியில் கடந்த தேர்தலில் நாகப்பாவை தோற்கடித்தவர் ராஜூகெளடா.

வீரப்பனின் காட்டுப் பகுதியை ஒட்டிய தொகுதியைச் சேர்ந்தவர் என்றாலும் கூட அவனை மிகக் கேவலமாகவே பேசி வந்தவர் நாகப்பா.

வீரப்பனைப் பிடிக்க வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் இவர். இதனால் அவருக்கு வீரப்பன் கடந்த ஆண்டு மிரட்டல்கடிதம் கூட அனுப்பியிருந்தான். இதனால், அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. ஆனால்,அவர்களையும் மீறி அவரைக் கடத்திச் சென்றுள்ளான் வீரப்பன். வழக்கமாக காட்டுப் பகுதிக்குச் செல்லும்போது அவருக்கு கூடுதல்பாதுகாப்பு தரப்படுவது வழக்கம்.

ஆனால், நேற்று மைசூர் போலீசாரிடம் தெரிவிக்காமலேயே தனது காட்டுப் பகுதி பண்ணை வீட்டுக்குச் சென்றார். வீரப்பனில் சிக்கிக்கொண்டார்.

காரணம் - 2:

இரண்டாவது காரணமாகக் கருதப்படுவது ரஜினி விவகாரம். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தினான்.சமீபத்தில் ராஜ்குமாரின் 3வது மகன் புனித் நடித்த அப்பு என்ற கன்னடப் படத்தின் நூறாவது நாள் விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த்,வீரப்பனைக் கொல்ல வேண்டும் என்று பேசினார்.

கர்நாடகத்தில் போய் ரஜினி இவ்வாறு பேசியதால் கடுப்படைந்த வீரப்பன் கர்நாடக அரசுக்கும் ரஜினிக்கும் பாடம் கற்பிக்க இந்தச் செயலில்ஈடுபட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. கர்நாடக போலீசார் மத்தியில் இந்தக் கருத்து தான் நிலவுகிறது.

இது தவிர இன்னொரு காரணம் பணம். சமீப காலமாகவே வீரப்பனின் கூட்டத்தின் மீது அதிரடிப்படை எடுத்து வந்த நடவடிக்கையால்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளான் வீரப்பன். ராஜ்குமாரை விடுவிப்பதற்காக இவன் வாங்கிய கோடிக்கனக்கான பணத்தை தனது மனைவிமற்றும் உறவினர் வீடுகளில் பதுக்கி வைத்திருந்தான் வீரப்பன்.

ஆனால், அதையெல்லாம் அதிரடிப்படையினர் அள்ளிவிட்டனர். இதனால் மீண்டும் பணம் ஈட்ட நாகப்பாவை அவன் கடத்தியிருக்கலாம்என்று கூறப்படுகிறது.

காரணம் 3:

சமீபத்தில் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டார். அவரது அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.இதனால் வீரப்பனுடன் உள்ள தமிழர் மீட்சிப் படை போன்ற அமைப்பினர் அவனைத் தூண்டி விட்டு இந்தக் கடத்தலை நடத்தியிருக்கலாம்என்று தெரிகிறது.

இதன்மூலம் நெடுமாறனை விடுதலை செய்யுமாறு தமிழக அரசுக்கு தமிழர் மீட்சிப் படையினர் நெருக்குதல் தரலாம் என தமிழக போலீசார்கூறுகின்றனர்.

காரணம் 4:

சமீபகாலமாகவே தன்னை தமிழர் நலனுக்காகப் போராடும் போராளி மாதிரி காட்டி வருகிறான் வீரப்பன். நாளை பிரதமர் தலைமையில்காவிரி ஆணையக் கூட்டம் நடக்க உள்ள நிலையில் நேற்று காலை நடந்த கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழகத்துக்கு தண்ணீர்விடுவதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டது.

இதையடுத்து காவிரி விஷயத்தில் கர்நாடகத்தை நெருக்கவும் வீரப்பன் மூலமாக தமிழர் மீட்சிப் படையினர் இந்தக் கடத்தலைநடத்தியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X