For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீரப்பன் குறித்து ரஜினி மூச்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அமெரிக்காவிலிருந்து இன்று காலை சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த்திடம் வீரப்பன் குறித்துக் கேட்டபோது யோசித்து பதில் சொல்வதாகக் கூறிவிட்டுச் சென்றார்.

அவரது குரு சச்சிதானந்தா சுவாமிகளின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்த ரஜினிஇன்று தான் சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்திலேயே ரஜினியை நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர். வீரப்பன் விவகாரம் குறித்துக்கேட்டனர்.

இதற்குப் பதிலளித்த ரஜினி, இப்போதுதான் ஊரிலிருந்து வருகிறேன். யோசித்துச் சொல்கிறேன் என்று கூறி விட்டுஉடனடியாக அங்கிருந்து அகன்று விட்டார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் பெங்களூரில் ராஜ்குமாரின் மகன் நடித்த "அப்பு" திரைப்படத்தின் நூறாவது நாள்விழாவின் போது பேசிய ரஜினி, சந்தனக் கடத்தல் வீரப்பனை "சம்ஹாரம்" செய்து கொல்ல வேண்டும் என்றுபேசினார்.

ரஜினியின் இந்தப் பேச்சு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழனாகிய வீரப்பனைக் கொல்லவேண்டும் என்று கர்நாடகத்தில் போய் ரஜினி பேசுவதா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கொதித்து எழுந்தார்.

இதையடுத்து பாமக தொண்டர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில் தான் "பாபா" படம் ரிலீசானது. ஜெயங்கொண்டத்தில் "பாபா" படப்பெட்டிகொள்ளையடிக்கப்பட்டதோடு, தமிழகத்தின் வட மாவட்டங்களில் சில நாட்கள் "பாபா" படம் திரையிடப்படுவதும்தடுக்கப்பட்டது. மேலும் "பாபா" படத்தை திரையிட்ட ஒரு தியேட்டர் அதிபரும் கடத்தப்பட்டார்.

இறுதிச் சடங்கில் ரஜினி:

இந்தப் பரபரப்புகளுக்கு இடையில் தான் ரஜினியின் ஆன்மீக குரு என்று வர்ணிக்கப்பட்ட சச்சிதானந்த சுவாமிகள்,"பாபா" பட வெளியீட்டிற்காக சென்னை வந்திருந்தார்.

"பாபா" ரிலீஸான நிலையில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு சச்சிதானந்த சுவாமிகள் சென்னையிலேயேமரணமடைந்தார். அவரது உடல் அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் உள்ள அவரது மடத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.

இதற்கான அனைத்து வேலைகளையும் ரஜினியே முன் நின்று செய்தார். சுவாமியின் உடலுடன் ரஜினியும்அமெரிக்கா சென்றார். ஆசிரமத்தில் ஏற்கனவே தயாராக வைக்கப்படிருந்த சமாதிக்குள் சச்சிதானந்தாவின் உடல்அடக்கம் செய்யப்பட்டது. இதில் ரஜினியும் கலந்து கொண்டார்.

சச்சிதானந்த சுவாமிகளின் உடல் அடக்கம் செய்யப்பட்டு தற்போது ஒரு மாதம் முடிந்த நிலையில் இன்று காலைரஜினி சென்னை திரும்பினார். அவருடன் அவருடைய மனைவியான லதா ரஜினிகாந்த்தும் வந்தார்.

சச்சிதானந்தாவின் மறைவையொட்டி, ரஜினி மொட்டை அடித்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X