ஈவ்-டீசிங் செய்தால் இனி ஆயுள் தண்டனை
சென்னை:
ஈவ்-டீசிங் தடுப்புச் சட்டத்தை மேலும் கடுமையாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்டத் திருத்தம் இன்று சட்டமன்றத்தில்கொண்டு வரப்பட்டது.
இதன்படி இனி ஈவ்-டீசிங் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனையும், ரூ, 50,000 அபராதமும் வழங்கப்படும்.
இந்தத் திருத்த்தில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 1998ம் ஆண்டு ஈவ்-டீசிங் தடுப்பு சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. ஆனால், இதன் பின்னரும் பள்ளி, கல்லூரிமாணவிகளைக் கேலி செய்வது தொடர்ந்து கொண்டு தான் உள்ளன. சில நேரங்களில் ஈவ்-டீசிங்கால் உயிரிழப்பும் கூட ஏற்படுகிறது.
இதையடுத்து இச் சட்டத்தை மேலும் கடுமையாக்க மாநில சட்டக் கமிஷனிடம் கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து இச்சட்டத்தில் பலமாறுதல்களை கமிஷன் கொண்டு வந்துள்ளது.
மேலும் ஈவ்-டீசிங்குக்கான தண்டனைக் காலத்தைக் கூட்ட வேண்டும் எனவும் பல பெண்கள் அமைப்புகள் கோரியிருந்தன.
இந்த கோரிக்கைகளை ஏற்றும், சட்டக் கமிஷன் கமிஷன் சொன்ன திருத்தங்களை ஏற்றும் ஈவ்-டீசிங் சட்டத்தை மேலும் கடுமையாக்கும்வகையில் இந்தச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இச் சட்டத்தின்படி ஈவ்-டீசிங் செய்து பெண்ணின் உயிரிழப்புக்கு காரணமாக இருப்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும். ரூ.50,000 அபராதமும் விதிக்கப்படும்.
இந்தக் குற்றச் செயலுக்கு உதவியாக இருப்பவர்களுக்கு 3 வருட சிறை தண்டனையும் ரூ 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என அரசுகூறியுள்ளது.


