திருவண்ணாமலை கோவில் விவகாரம்: மத்திய அரசுக்கு சங்கராச்சாரியார் எதிர்ப்பு
காஞ்சிபுரம்:
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக் கோவிலை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளமத்திய தொல்பொருள் ஆய்வுத் துறைமுடிவு செய்திருப்பற்கு காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
மத்திய சுற்றுலாத்துறையின் இந்த முடிவை கண்டித்து திருவண்ணாமலையில் நேற்று பந்த் நடந்தது. இதனால் நகரில் இயல்பு வாழ்க்கை முழுஅளவில் ஸ்தம்பித்தது. மேலும் மத்திய அரசின் இந்தத் திட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் முதல்வர்ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.
இந் நிலையில் காஞ்சி சங்கராச்சாரியாரும் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜக்மோகனின் இந்த முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
சங்கராச்சாரியார் கூறுகையில், கோவில் வளாகத்தில் முறைகேடாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் குறித்து ஆராயப் போவதாகதொல்பொருள் ஆய்வுத் துறை கூறியிருப்பது கண்துடைப்பாகும். கோவியைப் பாதுகாக்கப் போகிறோம் என்று அந்தத் துறை கூறுகிறது.பாதுகாப்பது என்பது வேறு. புனிதத்தை காப்பது என்பது வேறு. இதை தொல்பொருள் துறை உணர வேண்டும்.
முறைகேடாக கட்டடங்கள் கட்டப்பட்டால் அதை நகராட்சியும் மாவட்டக் கலெக்டரும் தடுக்க முடியும். உள்ளூர் அரசியல்வாதிகளின்நெருக்குதலுக்குப் பணியாமல் அதிகாரிகள் செயல்பட்டாலே போதும். எல்லாம் சரியாக இருக்கும் என்றார்.
-->


