சோனியாவுக்கு பதவி வெறி: ஜெ. மீண்டும் பாய்ச்சல்
சென்னை:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பதவி வெறி வந்து விட்டது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.
சமீப காலமாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் சோனியாவைக் கடுமையாகத் தாக்கிப் பேசி வருகிறார்ஜெயலலிதா.
இந்நிலையில் நேற்று சென்னையில் நிருபர்கள் சந்திப்பின் போதும் சோனியாவை ஜெயலலிதா கடுமையாகவாரினார்.
மத்தியில் விரைவில் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி அமைக்கப் போவது குறித்து சோனியா பேசியது தொடர்பாகஜெயலலிதாவிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர் பதிலளிக்கையில்,
இவ்வளவு நாளும் காங்கிரஸ் தனித்தே மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று கூறி வந்த சோனியா, தற்போதுகூட்டணி ஆட்சி அமைக்கத் தயார் என்று கூறியுள்ளார்.
இதிலிருந்தே அவர் எந்த அளவுக்கு ஆதங்கத்துடன் உள்ளார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
எப்படியாவது (பிரதமர்) பதவியை அடைய வேண்டும் என்ற வெறி மற்றும் ஆதங்கத்தைத் தான் சோனியாவின்இந்தச் செயல் காட்டுகிறது.
தேசிய அளவில் 3-வது அணி அமைக்க இப்போது அவசரம் இல்லை. கால அவகாசம் நிறையவே உள்ளது.
இன்னும் பல மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தத் தேர்தல்கள் எல்லாம் முடிந்த பிறகு தான்தலைவர்கள் எல்லாம் கூடிப் பேசி மக்களவைத் தேர்தல் பற்றி சிந்திப்பார்கள். அந்த சமயத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்றார் ஜெயலலிதா.
இதற்கிடையே சோனியாவைத் தாக்கிப் பேசும் போது ஆங்கிலத்தில் "டெஸ்பிரேசன்" என்ற வார்த்தையைஉபயோகித்த ஜெயலலிதா அதற்குச் சரியான தமிழ் மொழிபெயர்ப்பு என்ன என்பதைப் பற்றி சிறிது நேரம்யோசித்தார்.
பின்னர் "நீங்களே இதற்கான ஒரு தமிழ் வார்த்தையை சொல்லுங்கள்" என்று அவர் நிருபர்களிடம் கூறினார்."விரக்தி" என்றும் "இயலாமை" என்றும் சில நிருபர்கள் கூறினர்.
ஆனால் ஜெயலலிதாவோ, "வெறி, ஆதங்கம் ஆகிய வார்த்தைகள் தான் சரியாக இருக்கும்" என்று கூறினார்.
ஸ்டாலினுக்கும் சூடு:
இதற்கிடையே சென்னை நகரில் சாலைகள் போடுவதற்காக ரூ.104 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதாஅறிவித்தார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
கடந்த 1996 முதல் 2001ம் ஆண்டு வரை இருந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாகவேசென்னை நகர சாலைகள் இந்த அளவுக்கு மோசமடைய காரணம்.
மேயராக இருந்த ஸ்டாலின் சாலைகளை செப்பனிட நடவடிக்கையே எடுக்கவில்லை. அவரால் தான் இந்தஅளவுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
தரமான சாலைகள் போட திமுக அரசு நடவடிக்கையே எடுக்கவில்லை. எனவே தான் மழை பெய்தவுடன் சாலைகள்பெயர்ந்து போய் விட்டன. மழைக்காலம் முடிந்தவுடன் நல்ல, தரமான சாலைகள் போடப்படும்.
இன்னும் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது. எனவே மழைக் காலம்முடிந்த பிறகு சேத மதிப்பு குறித்து மதிப்பிடப்படும். இதுவரை பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.
சென்னை மாநகராட்சிக்கு எல்லையில் 2,919 கிலோமீட்டர் சாலைகள் உள்ளன. இது தவிர நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட 137 கிலோமீட்டர் சாலைகளும் உள்ளன. மொத்தமாக 3,056 கிலோமீட்டர் சாலைகள் சென்னைமாநகரில் உள்ளன.
இவற்றில் மாநகராட்சிக்கு சொந்தமான சாலைகளை செப்பனிட ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பிற சாலைகளைசரி செய்ய ரூ.29 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் சாலைகளை போடும் பணி தொடங்கும். மார்ச்மாதத்திற்குள் இப்பணிகள் முடிவடையும்.
தமிழகம் முழுவதிலும் ஏரிகள், கண்மாய்கள், ஊருணிகள் நிரம்பி வழிவதாக செய்திகள் வந்துள்ளன. இது பெருத்தமகிழ்ச்சியைத் தருகிறது. மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்றார் ஜெயலலிதா.
நடிகர் ரஜினிகாந்த் குறித்து பொதுப்பணித் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாகநிருபர்கள் கேட்ட போது, அது குறித்து நீங்கள் அமைச்சரிடம் தான் கருத்து கேட்க வேண்டும் என்று ஜெயலலிதாபதிலளித்தார்.
-->


