கொஞ்சம் நிம்மதியில் ஜெ., சசி
சென்னை:
நீதிமன்றத்தால் முடக்கி வைக்கப்பட்ட டான்சி நிலம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை முதல்வர் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் அடிமாட்டுவிலைக்கு சுருட்டினர். இதை எதிர்த்து சுப்பிரமணியம் சுவாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம்ஜெயலலிதா, சசிகலாவை விடுவித்தது.
ஆனால், உச்ச நீதிமன்றத்தில் சுவாமி போட்ட அப்பீல் மனு மீதான தீர்ப்பு நிலுவையில் உள்ளது. இதில் தீர்ப்புஜெயலலிதாவுக்கு எதிராகப் போனால் பதவியைவிட்டு மீண்டும் விலக வேண்டிய நிலை உருவாகும்.
இந்தத் தீர்ப்பு அடுத்த வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டான்சி நிலத்தையும் நீதிமன்றம்முடக்கி வைத்துள்ளது. இந் நிலையில் தாங்கள் சுருட்டிய நிலத்தை அரசிடமே தந்துவிட தயாராக இருப்பதாகவும்இதனால் முடக்கத்தில் உள்ள நிலத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் எனவும் சசிகலா சார்பில் மனு தாக்கல்செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சிறு வழக்குகள் நீதிமன்ற நீதிபதி சிங்காரவேலன், சில நிபந்தனைகளுடன் இந்தமுடக்கத்தை நீக்குவதாக தீர்ப்பளித்துள்ளார்.
இதனால் நிலம் மீண்டும் ஜெ., சசி ஆகியோரின் வசம் வந்துவிடும். அதை அவர்கள் அரசுக்கே திருப்பித் தரவும்முடியும். இதனால் உச்ச நீதிமன்றத்திடம் இருந்து தப்பிவிடலாம் என இவர்கள் கருதுகின்றனர்.
இதற்கியைே நிலத்தை விடுவித்தாலும் கூட அதில் சில நிபந்தனைகளை நீதிபதி சிங்காரவேலன் வைத்துள்ளார்.அந்த நிபந்தனைகள் குறித்த விவரத்தை இரண்டு நாட்களில் அறிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.
-->


