For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை-திருவண்ணாமலை தினசரி ரயில் அறிமுகம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து அந்தஊருக்கும் சென்னை-தாம்பரத்திற்கும் இடையே தினசரி ரயில் இன்று ஓடத் தொடங்கியது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது.

குறிப்பாக கிரிவலம் செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. இதையடுத்து சிறப்பு ரயில் விடும்திட்டத்தை அமைச்சர் மூர்த்தி அறிமுகப்படுத்தினார். இதற்கு நல்ல வரவேற்பு இருந்ததையடுத்து அந்த சிறப்புரயிலை தினசரி இயக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இந்த ரயில் இன்று காலை மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தியால் தொடங்கிவைக்கப்பட்டது.

இந்த சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இயங்கும். தினசரி காலை 5.30 மணிக்குதிருவண்ணாமலையில் புறப்பட்டு காலை 10.30 மணிக்கு தாம்பரம் வரும். மறு மார்க்கத்தில், தாம்பரத்திலிருந்துமாலை 5.30க்குக் கிளம்பி இரவு 10.30க்குப் போய்ச் சேரும்.

நான்கு பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் பயணக் கட்டணம் ரூ.33 ஆகும்.

இன்றைய துவக்க விழாவுக்குப் பின்னர் நிருபர்களிடம் மூர்த்தி பேசுகையில், 2004ம் ஆண்டுக்குள் தமிழகத்தில்உள்ள மீட்டர்கேஜ் ரயில் பாதைகள் அனைத்தும் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு விடும். இதுதொடர்பானதிட்டப் பணிகள் முடுக்கி விடப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் கம்ப்யூட்டர் முன்பதிவுவசதி ஏற்படுத்தப்படும் என்றார்.

நாளை திருவண்ணாமலை மகா தீபம்:

இதற்கிடையே திருவண்ணாமலையில் நாளை மாலை கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் நிகழ்ச்சியை பொதிகைடிவியும், ஜெயா டிவியும் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.

கார்த்திகை திருநாளையொட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் முக்கிய உற்சவமானகார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நாளை மாலை 5.30 மணியளவில் நடக்கிறது.

திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றப்படும் நிகழ்ச்சியையொட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துத்தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,

கார்த்திகைத் தீப திருவிழா பெண்களின் வாழ்வை மேம்படுத்தும் நன்னாளாகும். கார்த்திகை தீபங்கள் ஒளிரும்நேரத்தில், அனைவரது வீடுகளிலும் மகிழ்ச்சி ஒளிரட்டும்.

கார்த்திகை தீபமேற்றி வழிபடும் அனைவரது வாழ்விலும் வளம், நலம் பல்கிப் பெருகட்டும் என்றுவாழ்த்தியுள்ளார் ஜெயலலிதா.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X