நாளை ரம்ஜான்: தலைவர்கள் வாழ்த்து
சென்னை:
இஸ்லாமியர்களின் பெருநாளான ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி தமிழக ஆளுநர்ராமமோகன் ராவ், முதல்வர் ஜெயலிதா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
ராமமோகன் ராவ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் அகலவும், மக்கள்அனைவரும் பரஸ்பர நல்லிணக்கத்தோடு வாழவும், நாடு நலம் பெறவும் இந்தப் பெருநாளில் உறுதியேற்போம்என்று தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா விடுத்துள்ள செய்தியில், மக்களிடையே சாந்தியும், சமாதானமும் தழைத்தோங்க இந்த நன்னாளில்உறுதியேற்போம் என்று கூறியுள்ளார்.
இவர்கள் தவிர திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் ராமதாஸ்உள்ளிட்ட தலைவர்களும் ரம்ஜான் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
கோவையில் இன்றே ரம்ஜான்:
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் நாளை ரம்ஜான் கொண்டாடப்படவுள்ள நிலையில், கோவையின் சிலபகுதிகளில் இன்றே ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.
கோவையில் உள்ள இரண்டு ஜமாத்துக்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் இன்று ரம்ஜான் கொண்டாடினர்.
பிறை தெரிந்ததாக செய்தி கிடைத்தவுடனேயே ரம்ஜான் பண்டிகையை கொண்டாடலாம் என்று நபிகள் நாயகம்கூறியுள்ளதாக தெரிவித்த அவர்கள், அந்தத் தகவல் கிடைத்த அடுத்த கணமே பெருநாளைக் கொண்டாடலாம்என்றும் கூறினர்.
அந்த அடிப்படையில் இன்றே ரம்ஜான் கொண்டாடப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஒருஜமாத்தைச் சேர்ந்தவர்கள் வின்ட்ஸன் சாலையில் உள்ள நல்லாயன் பள்ளி மைதானத்தில் தொழுகை நடத்தினர்.மற்றொரு ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் போத்தனூர் பகுதியில் தொழுகை நடத்தினர்.
கோவையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டிருந்தது.
-->


