நாகப்பா கொலை: பலனடைந்தவர்கள் ரகசியத்தை வெளியிடுவேன்- மருமகன் மிரட்டல்
பெங்களூர்:
நாகப்பாவின் மரணம் பற்றிய பல ரகசியங்களையும் வெளியிடுவேன் என்று அவரது மருமகன் டாக்டர் கிரண் படேல் கூறினார்.
நாகப்பாவை மீட்கக் கோரி பிரதமர் வாஜ்பாய், தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் கிருஷ்ணா ஆகியோரைசந்தித்தவர்களில் முக்கியமானவர் கிரண் படேல்.
மேலும் கொள்ளேகால் பகுதி ஐக்கிய ஜனதா தளத் தலைவர் பொன்னாச்சி மகாதேவசாமி மூலமாக தொடர்ந்து கிரண் படேலும்நாகப்பாவின் குடும்பத்தினரும் வீரப்பனுடன் பேச்சு நடத்தி வந்ததாகவும் தெரிகிறது. நாகப்பாவுக்கு 20 செட் ஆடைகளையும்,மருந்துகளையும் கூட அனுப்பி வைத்தனர்.
இதனால் நாகப்பாவை மீட்க அவரது குடும்பத்தினரே வீரப்பனுடன் பல சேனல்கள் வழியாக பேச்சு நடத்தி வந்தனர். ஆனால்,அதையும் மீறி அவர் கொல்லப்பட்டிருக்கிறார்.
இந் நிலையில் நேற்று நிருபர்களிடம் பேசிய படேல், மாமாஜி (நாகப்பா) மரணம் குறித்து நாங்களே தனியாக விசாரணைநடத்தினோம். இந்தக் கொலையின் பின்னணியில் யார், யார் இருக்கிறார்கள் என்பது குறித்து சுதந்திரமான, நியாயமானவிசாரணை நடத்தி உள்ளோம்.
இந்தக் கொலைக்குப் பின்னால் பலர் இருக்கின்றனர். நிறைய பேர் இந்தக் கொலையால் பலனடைந்துள்ளனர். அவர்கள் எந்தவகையில் பலனடைந்தனர் என்ற விவரத்தையும் கொலையாளிகளின் விவரத்தையும் விரைவில் வெளியிடுவேன் என்றார் கிரண்படேல்.
ராஜ்குமார் விவகாரத்தில் பின்னால் நடந்த பண பேரத்தை போட்டு உடைத்து கர்நாடக அரசையும் தமிழகத்தில் சிலரையும்நெளிய வைத்தார் முன்னாள் டி.ஜி.பி. தினகர்.
இந் நிலையில் கிரண் படேல் வெளியிடுவதாகக் கூறும் ரகசியத்தால் யார் யார் தலை உருளப் போகிறதோ தெரியவில்லை.
-->


