For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் குறித்த ஆராய்ச்சியில் கலாம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

குடியரசுத் தலைவரான பின்னர் டாக்டர் அப்துல் கலாம் இன்று முதல் முறையாக சென்னை வநாத்ர். அவரதுவருகையையொட்டி நகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் இருந்து இன்று காலை சிறப்பு விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த அப்துல்கலாமை ஆளுநர் ராம்மோகன் ராவும், முதல்வர் ஜெயலலிதாவும், அமைச்சர்கள், முப்படைகளின் அதிகாரிகள்வரவேற்றனர்.

முப்படைகளின் அணி வகுப்பு மரியாதையையும் ஜனாதிபதி ஏற்றுக் கொண்ட கலாம் பின்னர் அங்கிருந்து குண்டுதுளைக்காத கார் மூலம் அண்ணா பல்கலைக்கழகம் சென்றார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்த கலாம் பேசுகையில்,பல்கலைக்கழத்திற்கும், தனக்கும் உள்ள தொடர்பைக் விளக்கினார். அவர் பேசுகையில், ஒவ்வொருவரும் கனவு காண வேண்டும்.அப்போதுதான் வெற்றி பெற முடியும்.

கனவு காண முடியவில்லை, நம்மால் இது முடியாது என்று நினைத்துவிட்டால் அது தோல்வியில்தான் முடியும். மாறாக நம்மால்நிச்சயம் முடியும் என்று வெறியோடு போராடினால் என்றாவது ஒரு நாள் வெற்றி நிச்சயம் அது நம் வசப்படும்.

திருவனந்தபுரத்தில் நான் மன வளர்ச்சிக் குறைந்த 200 குழந்தைகளைச் சந்தித்தேன். அவர்களுக்கு வெளியுலகம் குறித்து சற்றும்தெரியவில்லை. இதனால் நான் மிகவும் மன வேதனை அடைந்தேன். நான் தமிழில் எழுதிய இறைவா அறிவு தீபம் ஏற்று என்றபாடலை, மலையாளத்தில் அந்த குழந்தைகள் பாடியபோது, கண்களில் நீர் மல்க அதை கேட்டு நின்றேன்.

மன வளர்ச்சிக் குறைந்த குழந்தைகளுக்காக நாம் ஏதாவது செய்தாக வேண்டும். அதற்கான ஆராய்ச்சியில் அண்ணாபல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது. நானும் அதில் என்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன் என்றார் கலாம்.

இந் நிகழ்ச்சியில் ஆளுநரும் முதல்வரும் கலந்து கொண்டனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள வள்ளல் அழகப்பச் செட்டியார் சிலையை ஆளுநர் ராம் மோகன் ராவ் திறந்துவைத்தார். பல்கலைக்கழகத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள டெலி மெடிசின் வசதியை முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.

பின்னர் தரமணி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பயோ டெக்னாலஜி ஆய்வகத்திற்கு சென்ற கலாம் அங்குள்ளதொழிநுட்ப வசதிகளையும் ஆராய்ச்சிகளையும் நேரில் கேட்டறிந்தார்.

அங்கிருந்த ராஜ்பவன் சென்ற கலாம் தமிழக ஆளுநர் ராமமோகன் ராவ் அளிக்கும் மதிய விருந்தில் கலந்துகொண்டார். பின்னர் பார்வையாளர்களையும் டாக்டர் கலாம் சந்தித்தார்.

கலாமின் வருகையை ஒட்டி விமான நிலையத்தைச் சுற்றிலும் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட காவல்துறைக்கண்காணிப்பாளர் பொன்.மாணிக்கவேல் தலைமையில் சுமார் 500 போலீஸார் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டனர்.

கலாம் வந்து போகும் சாலைகளில் நூற்றுக்கணக்கான போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், விமான நிலையத்தில் இருந்து கலாமின் கார் வரிசை வரும்போது ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்துநிறுத்தப்பட்டு வேளச்சேரி, சேலையூர், புலியூர், பல்லாவரம், குன்றத்தூர் வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.

இன்று மாலை அண்ணாமலை அரங்கில் தமிழ் இசைச் சங்கத்தின் இசை விழாவில் கலந்து கொண்டுவிட்டு, இரவுராஜ்பவனிலேயே தங்குகிறார்.

நாளை காலை 11 மணிக்கு மீண்டும் அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் டாக்டர் கலாம், அங்குள்ளவிவேகானந்தா ஆடிட்டோரியத்தில் பள்ளிக் குழந்தைகளுடன் கலந்துரையாடுகிறார்.

மாலை சென்னை மியூசிக் அகாடமியின் பவள விழாவிலும் டாக்டர் கலாம் கலந்து கொள்கிறார். நாளை இரவுஅவர் டெல்லி திரும்புவார்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X