வீரப்பன்: பெல்காமில் கொரில்லா பயிற்சி பெற்ற படைகளை கோரும் கர்நாடகம்
பெங்களூர்:
பெல்காமில் உள்ள மத்திய கமாண்டோ படை மையத்தில் பயிற்சி பெற்று வரும் "கொரில்லா" வீரர்களைவீரப்பனைப் பிடிக்க அனுப்ப வேண்டும் என மத்திய அரசிடம் கர்நாடகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூரில் இன்று நிருபர்களிடம்பேசுகையில்,
வீரப்பனைப் பிடிப்பதற்காக உதவ வேண்டும் என்றும், நவீன ரக ஆயுதங்களை வழங்க வேண்டும் என்றும்,ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தோம்.
ஏற்கனவே மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கொரில்லா படை வந்துள்ளது. இது தவிர பெல்காமில் சில படைப்பிரிவினருக்கு மத்திய அரசு கொரில்லா போர் பயிற்சி தந்து வருகிறது. இந்த கமாண்டோக்களையும் வீரப்பனைப்பிடிக்கும் பணிக்கு அனுப்ப வேண்டும் என்று கோரியுள்ளோம்.
இந்த கமாண்டோ வீரர்கள் எந்தவிதமான காலநிலையிலும் காட்டுக்குள் சகஜமாகச் செல்லும் திறமைவாய்ந்தவர்கள்.
சிறிதளவு மட்டுமே உணவு சாப்பிட்டு விட்டு நீண்ட நேரத்திற்கு அவர்களால் பசியைத் தாக்குப் பிடிக்க முடியும்.அந்த அளவுக்கு இவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.
ஒரு 15 நாட்கள் இந்த வீரர்களை வீரப்பன் காட்டுக்குள் அனுப்பினால் போதும், அவனை எப்படியும் பிடித்துவிடலாம் என்றார் கார்கே.
இந்நிலையில் வீரப்பன் விவகாரம் குறித்துப் பேசுவதற்காக கர்நாடக, தமிழக, கேரள முதல்வர்களின் கூட்டத்தைநடத்த வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாயிடம் கர்நாடக முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தக் கூட்டம் அநேகமாக வரும் 22ம் தேதி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய கூட்டத்தின் போதுஇந்த கமாண்டோ வீரர்களை அனுப்புவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிகிறது.
இதற்கிடையே காட்டுக்குள் புகுந்துள்ள தமிழக, கர்நாடக அதிரடிப்படை வீரர்கள் வீரப்பனைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
ஆனால் இப்போதெல்லாம் இந்தத் தேடுதல் வேட்டை குறித்து பத்திரிக்கைகளுக்கு அதிரடிப்படை அதிகாரிகள்எந்த விவரமும் அளிப்பதில்லை.
சமீபத்தில் சென்னையில் இரு மாநில அதிகாரிகளும் சந்தித்துப் பேசிய பின், அந்தச் சந்திப்பின் விவரம் "டாப்சீக்ரெட்" என்று தமிழக டி.ஜி.பி. நெய்ல்வால் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணை கமிஷனுக்கு யார் தலைவர்?
இதற்கிடையே வீரப்பனால் கடத்தப்பட்ட கர்நாடக முன்னாற் அமைச்சர் நாகப்பாவின் மர்மமான கொலை குறித்துநீதி விசாரணை நடத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்த விசாரணைக் கமிஷனுக்கு கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.கே. ஜெயின் பெயரை அரசுபரிந்துரை செய்யப் போவதாக கார்கே கூறினார்.
-->


