For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மூடுபனி: வட இந்தியாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

டெல்லியில் இன்று கடும் மூடுபனி நிலவியதைத் தொடர்ந்து அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப்பாதிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிக்காலம் மக்களை வாட்டியெடுக்கும். இந்தஆண்டும் வழக்கம்போலவே இந்தியாவின் பல பகுதிகளிலும் கடும் பனி நிலவுகிறது.

அதேபோல் டெல்லியிலும் கடந்த சில நாட்களாக கடுமையான மூடுபனி ஏற்பட்டு வருகிறது.

மாலை 5 மணிக்கு முன்பாகவே பனி கொட்டத் தொடங்குகிறது. இரவு முழுவதும் நகரில் பனி கொட்டிக்கொண்டிருக்கிறது. காலை 10 மணிக்குத்தான் ஓரளவு பனி விலகத் தொடங்குகிறது.

இன்று காலையும் டெல்லியில் கடுமையான மூடுபனி நிலவியதால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைகடுமையாகப் பாதிக்கப்பட்டது.

விமான நிலையத்திற்கு எந்த ஒரு விமானமும் வந்து தரையிறங்க முடியவில்லை. அதுபோலவே அங்கிருந்து எந்தவிமானமும் புறப்படவும் முடியவில்லை.

காலை 9 மணிக்குக் கூட எதிரே யார் வருகிறார்கள் என்று தெரியாத அளவுக்குப் பனி மூடிக் கிடந்தது.

மூடுபனி காரணமாக டெல்லியில் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்துகளும் மோசமாகப் பாதிக்கப்பட்டன.

ரயில்கள் அனைத்தும் கால தாமதமாகத்தான் நிலையத்திற்கு வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றன. சாலைகளிலும்வாகனங்கள் அனைத்தும் நத்தை போல ஊர்ந்து கொண்டிருந்தன.

மேற்கு வங்காளத்தில் 2 பேர் பலி:

இதற்கிடையே மேற்கு வங்காள மாநிலத்தில் கடும் மூடுபனி காரணமாக ஏற்பட்ட விபத்தில் 2 பேர்கொல்லப்பட்டனர்.

அம்மாநிலத்தின் கான்பூர் நகரில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஒரு பைக் மீது பஸ் மோதியதில், அந்தபைக்கில் சென்று கொண்டிருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்நிலையில் இந்தியாவின் பல பகுதிகளிலும் இரவு முழுவதும் கடுமையான மூடுபனி நிலவி வருகிறது.

வரும் ஜனவரி இறுதி வரை இந்நிலை அதிகரித்துக் கொண்டே செல்லும் என்று வானிலை அதிகாரிகள்தெரிவித்தனர்.

டார்ஜிலிங்கில் ஆலங்கட்டி மழை:

இதற்கிடையே கோடை வாசஸ்தலமாகிய டார்ஜிலிங்கில் கடந்த 2 நாட்களாக ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது.

ஆண்டுதோறும் குளிர்காலத்தில் இங்கு ஆலங்கட்டி மழை பெய்யும். இதையொட்டி ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்து குவிந்து இதைப் பார்த்து ரசிப்பது வழக்கம்.

அதுபோலவே இந்த ஆண்டும் கடந்த இரண்டு நாட்களாக ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. ஆனால் இந்தமுறை வழக்கத்திற்கு முன்பே இது தொடங்கி விட்டதால் பல சுற்றுலாப் பயணிகள் ஆரம்பகட்ட ஆலங்கட்டிமழையைக் காணத் தவறிவிட்டனர்.

ஆனாலும் விஷயம் கேள்விப்பட்டு டார்ஜிலிங்கிற்கு அடுத்த ஓரிரு நாட்களில் சுற்றுலாப் பயணிகளின்எண்ணிக்கை மளமளவென அதிகரிக்கும் என்று தெரிகிறது.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X