For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பயணிகள் வரத் தாமதம்.. ரயில் "லேட்".. கலாட்டா!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

400 பயணிகள் தாமதமாக வந்ததால், கொல்கத்தா செல்ல வேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார்முக்கால் மணி நேரம் தாமதமாக செல்ல நேரிட்டது.

கொல்கத்தாவைச் சேர்ந்த 400 பேர் ஒன்றாக பல்வேறு புன்னிய ஸ்தலங்களுக்கு தீர்த்த யாத்திரை கிளம்பினர்.அதேபோல, ராமேஸ்வரத்திற்கும் சென்றனர். அங்கு தங்களது யாத்திரையை முடித்துக் கொண்டு சென்னைதிரும்பினர்.

சென்னையில் இருந்து ஊர் செல்ல மொத்தமாக 400 டிக்கெட்டுகளை முன் பதிவு செய்திருந்தனர்.

ராமேஸ்வரத்திலிருது தாம்பரம் வரை வரும் சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர்கள் பயணித்தனர்.

இந்த ரயில் வழக்கமாக காலை 5.30 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். ஆனால் வெள்ளிக்கிழமை தாமதமாக 7மணிக்குத்தான் வந்தது. தாம்பரத்திலிருந்து சென்னை சென்டிரல் ரயில் நிலையம் வருவதற்கு மின்சார ரயில்கிடைப்பதிலும் தாமதம் ஏற்பட்டது.

இந் நிலையில் 9 மணிக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பத் தயாராக இருந்தது. ஆனால் ராமேஸ்வரத்தில்இருந்து வந்து கொண்டிருக்கும் புனித யாத்திரையாளர்கள் சென்டிரல் ரயில் நிலையம் வரவில்லையே என்றுஅவர்களது உறவினர்கள் பதறிப் போயினர்.

இந்த சமயத்தில் கோரமண்டல் கிளம்பும் நேரம் நெருங்கியது. அது புறப்படத் தயாரானது. ஆனால் தங்களதுஉறவினர்கள் வந்தவுடன் ரயிலைக் கிளப்புமாறு அவர்கள் ரயில் நிலைய மேலாளரிடம் உறவினர்கள்வற்புறுத்தினர்.

ஆனால் அவர் ரயிலை தாமதப்படுத்த மறுத்து விட்டார். அப்போது ரயில் கிளம்பவே, உறவினர்களில் சிலர்ரயிலுக்குள் ஏறி அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர்.

இதையடுத்து அங்கு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. ரயில்வே பொது மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள்விரைந்து வந்தனர். உறவினர்கள் வராத நிலையில் ரயிலை கிளப்பக் கூடாது என்று அவர்கள் வாதிட்டனர்.

இதை மற்ற பயணிகள் எதிர்த்தனர். இதனால் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. அடிதடி உருவாகும் சூழல்ஏற்பட்டது. இந் நிலையில் தாம்பரத்தில் இருந்து 400 பேரும் சென்ட்ரல் வரும் ரயிலில் வந்து கொண்டிருப்பதுஉறுதியானதையடுத்து அவர்கள் வந்த பிறகே ரயிலைக் கிளப்புமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதனால் ரயில் காத்திருந்தது. சிறிது நேரத்தில் தாம்பரத்திலிருந்து வந்த மின்சார ரயிலில் இருந்து 400 கொல்கத்தாயாத்ரீகர்களும் வந்து இறங்கினர். பின்னர் அவசரம் அவசரமாக கோரமண்டலில் ஏறி அமர்ந்தனர். அதன் பிறகேகோரமண்டல் எக்ஸ்பிரல் ரயில் கிளம்பியது.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X