ஜெ. சொத்து குவிப்பு வழக்கு: விசாரணை அதிகாரி சாட்சி அளித்தார்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக முந்தைய திமுக ஆட்சியில் தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கு தொடர்பானவிசாரணை நேற்று தனி நீதிமன்றத்தில் தொடங்கியது. புலன் விசாரணை போலீஸ் அதிகாரியான நல்லம்ம நாயுடுநேற்று சாட்சியளித்தார்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் (1991-96) வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி மதிப்புக்கு சொத்துக்கள்சேர்த்ததாக ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்களான சுதாகரன் மற்றும் இளவரசிஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு தற்போது முதலாவது தனி நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கத்திடம் சமீபத்தில் மாற்றப்பட்டது. நேற்றுஇவ்வழக்கு தொடர்பான விசாரணை தொடங்கியது.
இவ்வழக்கில் அனைத்து மற்ற அரசுத் தரப்பு சாட்சிகளின் விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடைசி அரசுத்தரப்பு சாட்சியான நல்லம்மநாயுடு நேற்று சாட்சி அளித்தார். அவர் சாட்சி அளிக்கும்போது கூறுகையில்,
கடந்த 1996ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி இந்த சொத்து குவிப்புதொடர்பாக சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் புகார் செய்தார். இவ்வழக்கின் முதல் எதிரியானஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருந்ததாக அவர் தன் புகாரில் கூறியிருந்தார்.
அப்போது லஞ்ச ஒழிப்புத் துறையின் தலைவரான லதிகா சரணின் கீழ் நான் கூடுதல் எஸ்.பியாகப் பணிபுரிந்துகொண்டிருந்தேன். சுவாமியின் புகார் தொடர்பாக விசாரணை செய்யுமாறு லதிகாவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து இப்புகார் தொடர்பாக ஆவணங்களைச் சேகரிக்குமாறு லதிகா எனக்கு உத்தரவிட்டார். நானும் மற்றஅதிகாரிகளுடன் பல அலுவலகங்களுக்கும் சென்று இது தொடர்பான ஆவணங்களைச் சேகரித்தேன்.
மேலும் 1996ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி லதிகா முன்னிலையில் சுவாமியையும் விசாரித்து அவருடையவாக்குமூலத்தைப் பெற்றேன். இதையடுத்து மேலும் சில சாட்சிகளைச் சேகரித்து அவர்களுடையவாக்குமூலங்களையும் நான் பதிவு செய்தேன்.
இதற்கிடையே அதே ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி முதல் செப்டம்பர் 4ம் தேதி வரை இவ்வழக்கின் விசாரணைக்குசென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. அந்த இடைப்பட்ட காலத்தில் நாங்கள் எங்கள் விசாரணையை நிறுத்திவைத்திருந்தோம்.
பின்னர் செப்டம்பர் 7ம் தேதி முதல் நானே இது தொடர்பான விசாரணையைத் தொடர்ந்தேன். பின்னர் அதே மாதம்18ம் தேதி முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தேன்.
இதைத் தொடர்ந்து செப்டம்பர் 25 மற்றும் 26ம் தேதிகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுதாகரன் மற்றும் இளவரசிஆகியோரை விசாரித்து அவர்களுடைய வாக்குமூலங்களைப் பதிவு செய்தேன்.
பிறகு அதே ஆண்டு அக்டோபர் 16ம் தேதி, இவ்வழக்கு தொடர்பாக 76 இடங்களில் சோதனை நடத்த முதன்மைசெஷன்ஸ் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றேன். அதன் அடிப்படையில் பல நாட்கள் பல்வேறு அதிகாரிகள்தலைமையில் அந்த இடங்களில் சோதனை நடத்தினோம்.
இந்தச் சோதனைகள் தொடர்பான அறிக்கையை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தேன்என்றார் நல்லம்ம நாயுடு.
இதையடுத்து ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணையை நாளை வரை ஒத்திவைத்தார் நீதிபதிராஜமாணிக்கம். நாளை இவ்வழக்கு தொடர்பாக மீண்டும் விசாரணை நடக்கிறது.


