For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொல்கத்தாவில் இந்திய கிரிக்கெட்டுக்கு "இறுதி ஊர்வலம்"

By Staff
Google Oneindia Tamil News

கொல்கத்தா:

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் சமீபத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் மோசமாகத்தோற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு கொல்கத்தாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் "இறுதி ஊர்வலம்"நடத்தினர். இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி மற்றும் முகமது கைப் ஆகியோரின் வீடுகள்முற்றுகையிடப்பட்டன.

கடந்த 15ம் தேதி இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே தென் ஆப்பிரிக்காவில்நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா படுமோசமாக ஆடித் தோற்றது.

உலகக் கோப்பை வரலாற்றிலேயே இந்திய அணி மிகக் குறைவாக 125 ரன்களை மட்டுமே எடுத்தது.இதனால் ஆஸ்திரேலிய அணி மிகவும் எளிதாக இந்தியாவை வென்றது.

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சச்சிக் டெண்டுல்கர் தவிர அனைத்து வீரர்களுமே அன்றுமிகவும் மோசமாக விளையாடியதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் அதிருப்தியும், கோபமும்அடைந்தனர்.

கங்குலியின் சொந்த ஊரான கொல்கத்தாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும் கடும் கோபமடைந்துஅவருடைய வீட்டை முற்றுகையிட்டனர். அவருக்கு எதிராக அவர்கள் பலத்த கோஷங்களைஎழுப்பினார்கள்.

இதையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்துவந்து ரசிகர்களைக் கட்டுப்படுத்தினார்கள். மேலும், தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாகஏற்கனவே பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த கங்குலியின் வீட்டில் நேற்று பாதுகாப்புபலப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே கொல்கத்தாவின் மற்றொரு பகுதியில், இந்திய அணியினரின் மோசமானஆட்டத்தைக் கண்டித்து கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு "இறுதி ஊர்வலமே" நடத்திவிட்டனர்.

இந்திய அணி இறந்து விட்டதாகக் கூறி அவர்கள் ஒரு பாடையைக் கட்டி, அதில் இந்திய அணிவீரர்களின் படங்களை மாட்டி அரிசி (வாய்க்கரிசியாம்), மலர்கள், கங்கா நீர் கலசம்ஆகியவற்றையும் அதில் பரப்பி வைத்து அந்தப் பாடையைத் தூக்கிச் சென்று "இறுதி ஊர்வலம்"நடத்தினர்.

இன்னும் பல இடங்களில் கங்குலி, டிராவிட் உள்ளிட்ட இந்திய அணி வீரர்களின் படங்களைரசிகர்கள் தீயிட்டுக் கொளுத்தினார்கள். "விளம்பரங்களில் நடிப்பதை விட்டுவிட்டு, ஒழுங்காகவிளையாடுங்கள்" என்று இந்திய அணியினரைத் தாக்கி அவர்கள் கோஷம் போட்டனர்.

இதற்கிடையே அலகாபாத்தில் உள்ள கைப்பின் வீட்டையும் கிரிக்கெட் ரசிகர்கள் முற்றுகையிட்டனர்.பெயின்ட் மற்றும் எண்ணெயை பாலிதீன் பைகளில் அடைத்து வீசினர்.

இதனால் வீட்டுக்குள் இருந்த கைப்பின் பெற்றோர் பதறிப் போய் போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.இதையடுத்து அவருடைய வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஒரு போட்டியின்போது கைப்பின் அபார ஆட்டத்தால் இந்தியஅணி பெரும் வெற்றி பெற்றது. அப்போது இங்குள்ள அவருடைய வீட்டுக்கு வந்த கிரிக்கெட்ரசிகர்கள் அவருடைய குடும்பத்தினரை கைகுலுக்கிப் பாராட்டிச் சென்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஆட்டத்தை பல வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களும்விமர்சித்துள்ளனர். அணித் தலைவருக்கான பொறுப்புணர்ச்சி உணர்ந்து கங்குலி ஆடவில்லை என்றுகூறியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான், அணியை இக்கட்டானநிலையிலிருந்து எப்படி மீட்டு வருவது என்பதை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் வாஹைப் பார்த்துகற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் பல நாடுகளில் வெளியாகும் பத்திரிக்கைகளும் இந்தியக் கிரிக்கெட் அணியினரை மிகவும்மோசமாக விமர்சித்துள்ளன.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X