For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கலகலக்கிறது சாத்தான்குளம்: பிரச்சாரம் தொடங்கினார் ஜெ: திமுக திடீர் பொதுக் கூட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சாத்தான்குளத்தில் தனது சூறாவளிப் பிரச்சாரத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கினார்.இங்கு தேர்தலைப் புறக்கணித்த திமுக அங்கு திடீர் பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

நேற்று தனது தோழி சசிகலா சகிதம் சிறப்பு விமானத்தில் தூத்துக்குடி போய்ச் சேர்ந்த ஜெயலலிதா அதிமுகவினரைநேரில் அழைத்து தொகுதியின் நிலைமையை விசாரித்தார். வென்றுவிடுவோம் என்று அவர்கள் உறுதிமொழிதந்தாலும் உளவுப் பிரிவு சொல்லும் சந்தேகத்தை அவர்கள் முன் வைத்த ஜெயலலிதா பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தஉத்தரவிட்டார்.

தனது பிரச்சார பிளானையும் தேர்தல் எக்ஸ்பர்ட்டான செங்கோட்டையனிடம் தந்து சீர் செய்யச் சொன்னார்.இதையடுத்து இன்று முதல் நேரடியாக தேர்தல் களத்தில் ஜெயலலிதாவே நேரில் குதித்தார். இன்று மாலை 4மணியளவில் தனது முதல்கட்ட பிரச்சாரத்தை அவர் துவக்கினார். அழகப்பபுரத்தில் இருந்து இந்தப் பிரச்சாரப்பேரணி தொடங்கியது.

ஜெயலலிதாவின் வருகையால் சாத்தான்குளம் களைகட்டியுள்ளது. எங்கு பார்த்தாலும் அதிமுககொடிகளும், பேனர்களும், சுவரொட்டிகளும்தான் தென்படுகின்றன. சுவர்களிலும் ஜெயலலிதாவைவரவேற்றும், அதிமுக வேட்பாளரான நீலமேகவர்ணத்துக்கு வாக்களிக்குமாறு கோரியும்வண்ணமயமான விளம்பரங்கள் மின்னிக் கொண்டிருக்கின்றன.

தெருக்களில் குவிக்கப்பட்டிருந்த குப்பைகளெல்லாம் அவசர அவசரமாக அகற்றப்பட்டுவருகின்றன. பிளீச்சிங் பவுடர்கள் தெளிக்கப்பட்டு, சுண்ணாம்பு பவுடரும் தெளிக்கப்பட்டு சுத்தம்செய்யப்பட்டுள்ளன.

இன்று அழகப்பாபுரத்தில் தொடங்கி எள்ளுவிளை, மறக்குடி, மணிநகர், புதுக்குளம், ஞானியார்குடியிருப்பு, ஆலங்கிணறு உள்ளிட்ட 28 சிறு, குறு கிராமங்கள், பகுதிகளில் ஜெயலலிதா பிரச்சாரம்செய்கிறார்.

இரவு 10 மணிக்கு சங்கரன் குடியிருப்பில் பிரச்சாரத்தை முடிக்கும் ஜெயலலிதா தூத்துக்குடிஆறுமுகனேரியில் உள்ள தரங்கதாரா நிறுவன கெஸ்ட் ஹவுசுக்குத் திரும்புவார்.

பின்னர் நாளை மாலை 4 மணிக்கு மீண்டும் பிரச்சாரசத்தைத் துவக்குகிறார். வரும் 20ம் தேதிஒருநாள் மட்டும் ஓய்வெடுக்கும் ஜெயலலிதா 22ம் தேதி பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அன்றேசென்னை திரும்புவார்.

திமுக திடீர் அட்டாக்:

இந் நிலையில் சாத்தான்குளம் இடைத் தேர்தலைப் புறக்கணிப்பதாகவும், யாருக்கும் ஆதரவு இல்லைஎன்றும் அறிவித்திருந்த திமுக திடீரென இங்கு பிரசாரப் பொதுக்கூட்டம் நடத்தப் போவதாகஅறிவித்துள்ளது.

இளைஞரணித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 22ம் தேதி நடக்கும் நடக்கவுள்ள இந்தப்பொதுக் கூட்டத்தில் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என திமுக கோரும். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்குமறைமுகமாக திமுக வாக்கு கேட்டும் என்று தெரிகிறது.

சட்டமன்ற ஜனநாயகமும் அதிமுக சர்வாதிகாரமும் என்ற தலைமைப்பில் நடக்கும் இக் கூட்டத்தில் சமீபத்தில்அரசால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி, நடிகர்நெப்போலியன் ஆகியோர் பேசுகின்றனர்.

மேலும் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பெரியசாமி, நெல்லை மண்டல பொறுப்பாளர் கருப்பசாமி பாண்டியன்ஆகியோரும் பங்கேற்கின்றனர். நாடார் சமூக மக்களின் வாக்குகளைத் திரட்ட அச் சமூகத்தைச் சேர்ந்த நடிகர்சரத்குமாரையும் இக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் செய்யவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

இந்தப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்வார்களா என்பது குறித்து இன்னும்தெரியவில்லை. இருப்பினும் காங்கிரஸ் செயல் தலைவரும் திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்வதற்காகத் துடித்துக் கொண்டிருப்பவருமான இளங்கோவன் கடைசி நேரத்தில் இக்கூட்டத்தில்கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வரும் வேளையில் அதிமுகவுக்குஎதிரான ஓட்டுக்களை சிதற விட்டுவிடாமல் காக்கும் பொருட்டு காங்கிரஸ் தலைவர்கள்கருணாநிதியை ரகசியமாக தொடர்பு கொண்டு ஆதரவு கோரியதாகவும், அதையடுத்தே இந்தப்பொதுக்கூட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையம் அருகே இரவு 7 மணிக்கு இக் கூட்டம் நடக்கிறது. கடைசி நேரத்தில் இக்கூட்டத்துக்கு போலீஸார் தடை விதிக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X