For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெங்களூர் ரயில் நிலையத்தில் 14 தமிழக குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

தமிழகத்தைச் சேர்ந்த 14 சிறுவர்களை மும்பைக்குக் கடத்த முயன்ற பெண் உள்பட 2 பேர் பெங்களூர் ரயில்நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். கடத்தப்படவிருந்த சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பெங்களூர் ரயில் நிலையத்தின் நுழைவு வாசலில் நேற்று காலை 14 சிறுவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்தனர்.அவர்களுடன் ஒரு இளம் பெண்ணும், மற்றொருவரும் இருந்தனர்.

அப்போது போஸ்கோ என்ற தன்னார்வத் தொண்டு இயக்கத்தினர் சந்தேகப்பட்டு அந்தச் சிறுவர்களைவிசாரித்தனர். "எங்களை இவர்கள் இரண்டு பேரும் மும்பைக்குக் கூட்டிச் செல்கிறார்கள்" என்று அந்தப்பெண்ணையும், ஆணையும் காட்டி சிறுவர்கள் கூறினர்.

இதையடுத்து சுதாரித்துக் கொண்ட போஸ்கோ அமைப்பினர் உடனடியாக ரயில்வே போலீசாருக்குத் தகவல்அளித்தனர். போலீசாரும் உடனடியாக விரைந்து வந்து விசாரித்தனர்.

அப்போதுதான் அந்த இரண்டு பேரும் சிறுவர்களை மும்பைக்குக் கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்துசின்னம்மா என்ற அந்தப் பெண்ணையும் அவருடன் இருந்த அப்போலியன் என்பவரையும் போலீசார் கைதுசெய்தனர்.

மேலும் விசாரித்ததில் அந்தச் சிறுவர்களும், அப்போலியனும், சின்னம்மாவும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதெரிய வந்தது. சின்னம்மா தமிழகத்தின் செம்படை என்ற ஊரைச் சேர்ந்தவர். அப்போலியன் கள்ளக்குறிச்சையைச்சேர்ந்தவர். இருவரும் தற்போது மும்பையின் மலாடு பகுதியில் வசித்து வருகின்றனர்.

அந்தச் சிறுவர்களை மும்பைக்குக் கொண்டு சென்று, அவர்களை வளையல் செய்யும் வேலையில் ஈடுபடுத்தஅவர்கள் திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது. சிறுவர்களின் பெயர் விவரம் (அடைப்புக் குறிக்குள் வயது, சொந்தஊர்):

சந்திரசேகர் (14, பெரிய மணியந்தல்), சேகர் (11, பெரிய மணியந்தல்), மைக்கேல் ஜான் (17, அரசம்பாடி),ஏழுமலை (14, கள்ளக்குறிச்சி), கோவிந்து (13, செம்படை), குமார் (12, செம்படை), மாரிமுத்து (16, பெரியமணியந்தல்), வெங்கடேஷ் (14, புது பழயச்சி), மணிகண்டன் (12, செம்படை), ராஜா (16, வடக்கு நல்லூர்),ராமச்சந்திரன் (17, அரசம்பாடி), முருகன் (16, கள்ளக்குறிச்சி), ஜேம்ஸ் (15, அரசம்பாடி) மற்றும் குணசேகர் (12,மணியந்தல்).

தமிழகத்தின் திருக்கோவிலூரிலிருந்து இவர்கள் அனைவரும் நேற்று காலை பஸ் மூலமாக பெங்களூர்கொண்டுவரப்பட்டு வந்து இங்கிருந்து மும்பைக்கு அழைத்துச் செல்ல சின்னம்மாவும், அப்போலியனும்திட்டமிட்டிருந்தனர்.

இந்தச் சிறுவர்களில் கோவிந்து, மணிகண்டன் மற்றும் ஜேம்ஸ் ஆகிய மூவரும் ஏற்கனவே மும்பையில் வளையல்தயாரிக்கு வேலை செய்தவர்கள். ஊருக்கு வந்து விட்டு மீண்டும் மும்பைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தனர்.

இந்தச் சிறுவர்களை அவர்களின் பெற்றோர் சம்மதத்துடன்தான் கூட்டிச் செல்வதாக அப்போலியனும், சின்னமாவும்போலீசாரிடம் கூறினர். இதையடுத்து அவர்கள் கூறுவது உண்மைதானா என்பதைத் தெரிந்து கொள்ள பெங்களூர்போலீசார் தமிழகத்தில் உள்ள அந்தச் சிறுவர்களின் சொந்த ஊர்களுக்கு விரைந்துள்ளனர்.

சிறுவர்களின் பெற்றோர் கூறும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றுபோலீசார் தெரிவித்தனர்.

திண்டுக்கல் சிறுவன் தந்தையிடம் ஒப்படைப்பு:

இதற்கிடையே கர்நாடகத்தில் காணாமல் போன ஒரு தமிழக சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டு, பெற்றோரிடமேஒப்படைக்கப்பட்டான்.

திண்டுக்கல் மாவட்டம் வேலன் சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன் என்ற விவசாயியின் மகனானமுத்துப்பாண்டி கர்நாடக மாநிலத்தில் வேலை செய்வதற்காக அனுப்பப்பட்டான்.

13 வயதான முத்துப்பாண்டி சில மாதங்களுக்கு முன் காணாமல் போய்விட்டதாக அவனுடைய தந்தை சென்னைஉயர் நீதிமன்றத்தில் "ஹேபியஸ் கார்ப்பஸ்" மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து போலீசார் அவனைக் கண்டுபிடித்து உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கர்நாடகத்தில் வேலைபிடிக்காததால் மும்பைக்குச் சென்று வேலை பார்த்ததாக முத்துப்பாண்டி நீதிமன்றத்தில் தெரிவித்தான்.

இதையடுத்து "ஹேபியஸ் கார்ப்பஸ்" மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், முத்துப்பாண்டியைஅவனுடைய தந்தையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X