For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"மாதிரி பட்ஜெட்", "நிழல் அரசாங்கம்": வெளிநாடு பாணியில் ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுத்தால் அரசுக்கு உதவும் பொருட்டு நிழல் அரசாங்கம் (ShadowCabinet) அமைக்கத் தயாராக இருப்பதாக பாமக நிறுவனரான டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழக அரசுக்கு உதவுவதற்காக மாதிரி பட்ஜெட்டை இன்று வெளியிட்ட டாக்டர் ராமதாஸ் பின்னர்நிருபர்களிடம் கூறுகையில்,

வெளிநாடுகளில் அரசுக்கு உதவி செய்வதற்காக நிழல் அரசாங்க முறை சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. அதே போன்ற நிழல் அரசை இங்கும் அமைக்க அரசு ஒத்துழைக்க வேண்டும்.

அப்படி ஒத்துழைத்தால் நாங்கள் எங்களது எம்.எல்.ஏக்களைக் கொண்டு நிழல் அரசு அமைத்துமக்களுக்குத் தேவையான பல திட்டங்களை அறிமுகப்படுத்துவோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆடம்பர விழாக்களுக்கு முடிவு கட்டுவோம். சாதாரண முறையிலேயேவிழாக்கள் நடைபெறும்.

போலீஸ்துறையை நடுநிலையுடன் செயல்பட வைப்போம். இதற்காக மாநில பாதுகாப்பு கமிஷன்அமைக்க வேண்டும் என்று எங்களது மாதிரி பட்ஜெட்டில் பரிந்துரைத்துள்ளோம்.விவசாயத்துறையை தொழில்துறையாக அறிவிக்கவும் ஒரு டன் கரும்புக்கு ரூ.1,000 தரவும்பட்ஜெட்டில் கூறியுள்ளோம்.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் மீதான கடன் சுமை அதிகரித்துவிட்டது. ஆனாலும் மக்கள்மீது வரிகளை அதிகம் விதிக்காமலேயே அரசின் வருமானத்தை அதிகரிக்க பல வழிகள் உள்ளன.இந்த விஷயத்தில் அரசுக்கு உதவத் தான் நிழல் அரசாங்கம் நடத்த உதவக் கோருகிறோம்.

சர்க்கரைத் தொழிற்சாலைகளில் உருவாகும் மொலாஸஸ் வீணடிக்கப்படுகிறது. இதை வைத்துஉயரிய மதுபானங்கள் தயாரிக்கலாம். இதன்மூலம் வருமானம் ஈட்டலாம். கன்சல்டன்சிநிறுவனங்களுக்கு வரி விதிக்கலாம்.

அடுத்த ஆண்டு தமிழக அரசின் செலவு ரூ. 33,662 கோடியாக இருக்கும் என்றுகணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், வருமானம் ரூ. 31,662 கோடி தான் இருக்கும். இதனால் ரூ. 2,000கோடி துண்டு விழும். இந்த பற்றாக்குறையை எளிதில் சமாளிக்கவும் வழிமுறைகளை மாதிரிபட்ஜெட்டில் கூறியுள்ளோம்.

காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசுவழக்குத் தொடுக்க வேண்டும். சம்பா பயிர் கருகியதால் நமது விவசாயிகளுக்கும் அரசுக்கும்ஏற்பட்ட நஷ்டத்திற்காக ரூ.5,000 கோடி நஷ்ட ஈடு கோரி கர்நாடகத்துக்கு எதிராக வழக்குத் தொடரவேண்டும் என்றார் ராமதாஸ்.

"ஓட்டுப் போடாதவர்களுக்கு தண்டனை":

இதற்கிடையே தேர்தல்களில் வாக்களிக்காத வாக்காளர்களைத் தண்டிக்க வேண்டும் என்று ராமதாஸ்கூறியுள்ளார்.

பாமக தொண்டர்களம மத்தியில் பேசிய அவர்,

தமிழகத்தில் 4.8 கோடி வாக்காளர்கள் ஓட்டுப் போடத் தகுதியானவர்கள். ஆனால் கடந்த சட்டசபைத்தேர்தலின்போது 2.47 கோடி வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். மற்றவர்கள் ஏதோகாரணத்திற்காக வாக்களிக்காமல் இருந்துள்ளனர்.

இந்த வாக்குகளில் அதிமுக கூட்டணிக்கு வெறும் 90 லட்சம் வாக்குகள் மட்டுமே கிடைத்தன.அதிலும் அதிமுகவுக்கு 50 லட்சம் வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

எனவே மாநில மக்கள் தொகையில் 10 சதவீத வாக்காளர்களின் ஆதரவை மட்டுமே அதிமுகபெற்றுள்ளது. மீதமுள்ள வாக்காளர்கள் அதிமுகவுக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர்.

ஓட்டுப் போடாமல் இருப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அவர்களது ரேஷன்கார்டுகளைப் பறிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.

மாதிரி பட்ஜெட் தயாரிக்க பலதுறை நிபுணர்கள், பொருளாதார வல்லுனர்களுடன் கடந்த சிலவாரங்களாக தனது தைலாபுரம் தோட்டத்தில் ஆலோசனை நடத்தினார் ராமதாஸ் என்பதுகுறிப்பிடத்தக்கது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X