போருக்கு எதிர்ப்பு: சக வீரரை கொன்றார் அமெரிக்க வீரர்
குவைத்:
ஈராக் மீதான போரை விரும்பாத அமெரிக்க வீரர் தனது படைகள் மீதே கிரனைட் குண்டுகளை வீசித் தாக்கினார்.இதில் ஒரு அமெரிக்க வீரர் கொல்லப்பட்டார். பத்துக்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து தாக்குதல் நடத்திய அமெரிக்க வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குவைத் நகரில் அமைந்துள்ள 101வது அமெரிக்க பாராசூட் வீரர்களின் முகாமில் இன்று அதிகாலை இச் சம்பவம்நடந்தது. இந்தப் படைப் பிரிவின் இன்ஜினியரான அந்த வீரர் இன்று அதிகாலை மற்ற வீரர்கள் தங்கியிருந்த 3கூடாரங்கள் மீது கிரனைட் குண்டுகளை வீசினார்.
மேலும் தனது படையின கமாண்டரின் கூடாரத்தின் மீதும் கிரனைட் தாக்குதல் நடத்தினார்.
இதில் அந்த கூடாரங்கள் வெடித்துச் சிதறின. இதில் ஒரு வீரர் அந்த இடத்திலேயே உடல் சிதறி இறந்தார். மேலும்13 பேர் பலத்த காயமடைந்தனர். இதில் 3 பேரின் நிலைமை மிக மோசமாக உள்ளது. அவர்களது உடலில் கிரனைட்சிதறல்கள் ஊடுருவி இருப்பதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இத் தாக்குதலை நடத்திய பின்னர் அந்த அமெரிக்க வீரர் ஒரு பாதாளஅறையில் சென்று மறைந்து கொண்டார்.அவரை பிற வீரர்கள் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர்.
இறந்த வீரரின் பெயரையும் தாக்குதல் நடத்திய வீரரின் பெயரையும் வெளியிட அமெரிக்கப் படைகள்மறுத்துவிட்டன. காயமடைந்த 13 வீரர்களில் 11 பேரை அமெரிக்க ஹெலிகாப்டர்கள் உடனடியாக அங்கிருந்துவெளியேற்றி வேறு இடத்துக்குக் கொண்டு சென்றன.


