For Daily Alerts
Just In
அமெரிக்க படையினரை தாக்கும் எகிப்து, சிரியா, ஜோர்டான் வீரர்கள்
பாக்தாத்:
ஈராக் படையினருடன் சேர்ந்து கொண்டு எகிப்து, ஜோர்டான் மற்றும் சிரிய நாட்டு வீரர்களும்எங்களைத் தாக்கி வருகின்றனர் என்று அமெரிக்க வீரர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்க விமானங்கள் தொடர்ந்து இடைவிடாமல் பாக்தாத் நகரில் குண்டு மழை பொழிந்துவருகின்றன.
சதாம் ஹூசேனின் மாளிகை அருகே டைக்ரிஸ் நதியில் ஒரு ஏவுகணை விழுந்து வெடித்ததால் அந்தமாளிகை தப்பித்தது.
இத்தனை களேபரங்களுக்கு மத்தியிலும் பாக்தாத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.கடைகள் திறந்துள்ளன. போக்குவரத்தும் பாதிக்கப்படவில்லை. மக்கள் தெருக்களில் நடமாடிக்கொண்டுதான் உள்ளனர்.


