தமிழகம் முழுவதும் நீதிபதிகள் டிரான்ஸ்பர்
சென்னை:
தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் பல நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
சென்னை சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற நீதிபதி பூதநாதன் பணிமாற்றம் செய்யப்பட்டுசென்னை சிவில் நீதிமன்ற 3வது உதவி நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவில் நீதிமன்ற 8வது நீதிபதி மணிபிள்ளை அதே நீதிமன்றத்தின் 4வது நீதிபதியாகமாற்றப்பட்டுள்ளார். மேலும் 5வது நீதிபதியாக 9வது நீதிபதி காமத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் கரூர், ஆரணி, மயிலாடுதுறை, தேவகோட்டை நீதிமன்றங்களில் சப்-ஜட்ஜாகப்பணியாற்றி வந்த நீதிபதிகளும் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் தேவகோட்டை, திருச்சி, திருவள்ளூர், நாகப்பட்டினம், சிவகங்கை,கோபிச்செட்டிப்பாளையம், ஈரோடு சப்-ஜட்ஜுகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றுஅந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


