For Daily Alerts
Just In
சட்டசபைத் தொகுதிகளை மாற்றாதீர்கள்: பாண்டிச்சேரி கோரிக்கை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள சட்டசபைத் தொகுதிகளை மாற்றக் கூடாது என்று அம் மாநில சட்டசபையில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாண்டிச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். பாண்டிச்சேரியில் தற்போது உள்ள தொகுதிகளின்எண்ணிக்கையில் மாற்றம் தேவையில்லை. தொகுதிகளின் எல்லைகளைத் திருத்தி அமைக்க வேண்டிய அவசியமும் இல்லை.
இது தொடர்பான நடவடிக்கைகளை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய சட்டசபைத் தொகுதிகள் நிர்ணயக் குழுவைக்கேட்டுக் கொள்கிறோம் என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. 5 பேர் கொண்ட குழு ஒன்று டெல்லி சென்று தொகுதி நிர்ணயக் குழுவுடன் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும் எனவும் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
-->


