புலிகள் விவகாரம்: ஜெயாவுடன் வாஜ்பாய் ஆலோசனை
சென்னை:
விடுதலைப்புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை உள்ளிட்டபல்வேறு பிரச்சனைகள் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் பிரதமர் வாஜ்பாய்தொலைபேசியில் பேசினார்.
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா இந்தியாவில் 4 நாள் அரசுமுறை பயணம்மேற்கொண்டுள்ளார். நேற்று அவர் துணைப் பிரதமர் அத்வானியைச் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில் இன்று காலை டெல்லியில் வாஜ்பாயை சந்தித்துப் பேசினார் சந்திரிகா. சந்திரிகாவைச்சந்திப்பதற்கு முன் இலங்கை பிரச்சனைகள் குறித்து ஜெயலலிதாவின் கருத்துக்களை வாஜ்பாய்கேட்டறிந்தார்.
ஜெயலலிதாவிடம் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்திய வாஜ்பாய், இலங்கை அமைதிப்பேச்சுவார்த்தை, அங்கு தமிழர்களை மீண்டும் குடியமர்த்துவது, தமிழகத்தில் உள்ள தமிழ் அகதிகளைஅந்நாட்டிற்கு எவ்வாறு அனுப்புவது ஆகியவை குறித்து பேசினார்.
இலங்கை மீனவர்களும், கடற்படையினரும் அடிக்கடி தமிழக மீனவர்களைக் கடத்திச் சென்றுஅந்நாட்டு சிறைகளில் அடைக்கப்படுவது குறித்து அப்போது வாஜ்பாயிடம் தெரிவித்தஜெயலலிதா, இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் புலிகள் விஷயத்தில் தமிழக அரசின் நிலை குறித்து வாஜ்பாயிடம் ஜெயலலிதா எடுத்துக்கூறினார். புலிகள் மீதான தடையை மத்திய அரசு நீக்கவே கூடாது என்றும், இத்தடையைத் தொடர்ந்துநீடிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் புலிகளை ஆதரித்துப் பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசியஇயக்கத் தலைவர் நெடுமாறன் ஆகியோரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்துசிறையில் அடைத்துள்ளது என்பதும் நினைவுகூறத்தக்கது.
தடையை நீக்க புலிகள் கோரிக்கை:
இதற்கிடையே தங்கள் மீதான தடையை நீக்கிக் கொள்ள வேண்டும் என்று இந்தியாவுக்கும்அமெரிக்காவுக்கும் புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஜெனீவாவில் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்களிடையே பேசும்போது புலிகளின் அரசில்ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் இவ்வாறு பேசியதாக இலங்கையில் வெளியாகும் "தமிழ்கார்டியன்" பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை இந்தியா மறந்துவிட வேண்டும். இலங்கைதமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக தற்போது நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில்இந்தியாவும் கலந்து கொள்ள வேண்டும்" என்று பாலசிங்கம் கூறியதாக அந்தப் பத்திரிக்கைகூறியுள்ளது.


