• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இருட்டறையில் கோபால்: வீட்டில் போலீசார் "ரெய்ட்"

By Staff
|

சென்னை:

பொடா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள "நக்கீரன்" ஆசிரியர் கோபால் போலீசார் தன்னைஇருட்டறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தனர் என்று கோபிச்செட்டிப்பாளையம்நீதிமன்ற நீதிபதியிடம் புகார் கூறினார்.

இதற்கிடையே அவருடைய சென்னை வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று அதிரடி சோதனைநடத்தினர்.

போலீஸ் உளவாளி கொலை, சந்தன வீரப்பனுக்கு ஆயுதங்கள் கடத்தல், தனித் தமிழ்நாடு அமைக்கமுயற்சித்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக கடந்த 11ம் தேதி கோபால் கைதுசெய்யப்பட்டார். இவ்வழக்குகள் அனைத்தும் நேற்று பொடா வழக்குகளாக மாற்றப்பட்டன.

போலீஸ் உளவாளியான ராஜாமணி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இன்றுகாலை சுமார் 11 மணிக்கு கோபிச்செட்டிப்பாளையம் நீதிமன்றத்தில் கோபால் ஆஜர்படுத்தப்பட்டார்.அப்போது நீதிபதி சசிகலாவிடம் கோபால் கூறுகையில்,

இந்தக் கொலை வழக்கில் என்னை ஒரு குற்றவாளியாகப் போலீசார் சேர்த்தது இதுவரை எனக்குத்தெரியாது. என் மீது பொடா வழக்கு போடப்பட்டது குறித்தும் இதுவரை போலீசார் என்னிடம்எதுவும் தெரிவிக்கவில்லை.

நான் நீதிமன்றக் காவலில் சென்னை மத்திய சிறையில் வைக்கப்பட்டிருந்தேன். ஆனால்சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் அனுமதி பெற்று என்னை நீதிமன்றக் காவலிலேயே போலீசார்சென்னையில் இருந்து அழைத்து வந்தனர்.

வரும் வழியில் போலீசார் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் என்னைத் துன்புறுத்தி சித்திரவதைசெய்தனர். கோபிக்கு வரும் வழியில் சில போலீஸ் நிலையங்களில் என்னை இருட்டறையில்அடைத்து வைத்து போலீசார் சித்திரவதை செய்தனர்.

சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகளான மாதவன், லட்சுமணன், நாகராஜன் ஆகியோர் எட்டி உதைத்துதுன்புறுத்தினர். என்னை கழிப்பறைக்குச் செல்வதற்குக் கூட போலீசார் அனுமதி மறுத்து விட்டனர்என்றார் கோபால்.

கோபால் கூறியது அனைத்தையும் எழுத்துப்பூர்வமான புகாராக எழுதி வாங்கிக் கொண்டார் நீதிபதிசசிகலா. இதையடுத்து இவ்வழக்கு விசாரணையை வரும் 30ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிசசிகலா உத்தரவிட்டார்.

பின்னர் அவர் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

நிருபர்கள் சாலை மறியல்:

இதற்கிடையே செய்தி சேகரிப்பதற்காக இந்த நீதிமன்றத்தின் வெளியே ஏராளமான பத்திரிக்கைநிருபர்கள் கூடியிருந்தனர்.

ஆனால் செய்தி சேகரிக்கவோ, புகைப்படம் எடுக்கவோ அவர்களைப் போலீசார்அனுமதிக்கவில்லை. மேலிடத்திலிருந்து இவ்வாறு உத்தரவு வந்திருப்பதாக மாவட்ட எஸ்.பியானபாலசுப்பிரமணியம் கூறினார்.

இதையடுத்து நிருபர்கள் அப்பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில்ஈடுபட்டனர்.

சத்தியமங்கலத்தில் கோபால்:

முன்னதாக நேற்று மாலை கோபாலை போலீசார் நேராக சத்தியமங்கலம் கொண்டு சென்றனர்.ராஜாமணி கொலை வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்காக அவர் சத்தியமங்கலம்கொண்டுசெல்லப்பட்டார்.

சத்தியமங்கலம் அருகே உள்ளே சித்தோடு போலீஸ் நிலையத்தில் நேற்றிரவு முழுவதும் விடிய விடியஅவரிடம் விசாரணை நடந்தது.

இடை இடையே வேறு சில போலீஸ் நிலையங்களிலும் கோபாலை வைத்திருந்தனர் போலீசார்.அப்போதுதான் போலீசார் தன்னைச் சித்திரவதை செய்ததாக கோபிச்செட்டிப்பாளையம்நீதிபதியிடம் அவர் புகார் கூறியிருந்தார்.

வீட்டில் ரெய்ட்:

இந்நிலையில் சென்னை-கீழ்ப்பாக்கம் அப்பாராவ் காலனியில் உள்ள கோபாலின் வீட்டில் இன்றுகாலை சுமார் 8 மணிக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

வீடு முழுவதும் இண்டு, இடுக்கு விடாமல் பல மணி நேரம் சோதனை நடத்திய போலீசார், சிலஆவணங்களைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

சோதனையின்போது கோபாலின் மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் இருந்தனர்.

கோபாலை சந்திக்க அனுமதி மறுப்பு:

முன்னதாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கோபாலை சந்திக்க தேசிய மனிதஉரிமை கமிஷன் உறுப்பினரான ஹென்றி டிபேனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

பிரபல வழக்கறிஞருமான டிபேன், கோபால் உள்பட பொடா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள 3 கைதிகளைப் பார்க்க அனுமதிக்கக் கோரி விண்ணப்பித்திருந்தார்.

அவரைக் காத்திருக்கும்படி சிறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். ஆனால் சுமார் ஒரு மணிநேரத்திற்குப் பின்னர், அவர்கள் 3 பேருமே அவரைப் பார்க்க விரும்பவில்லை என்று டிபேனிடம்சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதை எழுத்துப் பூர்வமாகக் கேட்டபோது அவ்வாறு கொடுக்க சிறை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.இதையடுத்து இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், மத்திய உள்துறைஅமைச்சகத்திற்கும் தந்தி அனுப்பியுள்ளதாக டிபேன் தெரிவித்தார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X