ஈராக் யுத்த செலவு 20 ஆயிரம் கோடி டாலர்!!!
வாஷிங்டன்:
ஈராக்கில் இதுவரை நடந்த யுத்தத்துக்கு 20 பில்லியன் டாலர் பணம் (20 ஆயிரம் கோடி டாலர்)செலவாகியுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.
அதே நேரத்தில் ஈராக்கில் மறு கட்டமைப்புப் பணிகளுக்கு எவ்வளவு செலவாகும் என்பதைத் தெரிவிக்க அவர்மறுத்துவிட்டார். இதில் போர் செலவாக 10 பில்லியன் டாலரும், படை வீரர்களுக்கு 6 பில்லியன் டாலரும், ஆயுதச்செலவு 4 பில்லியன் டாலரும் அடங்கும் என்றார்.
போரைத் தொடர்ந்து வங்கிகளில் நடந்த கொள்ளைகளில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள ஈராக்கிய கரன்சிசூறையாடப்பட்டுள்ளது.
இதனால் அந்த கரன்சியின் மதிப்பு அழிந்து போயுள்ளது. இதையடுத்து ஈராக்கின் தாற்காலிக கரன்சியாகஅமெரிக்க டாலரை புழக்கத்தில் விட பென்டகன் திட்டமிட்டுள்ளது. இதற்காக கோடிக்கணக்கான டாலர்கள்மதிப்புள்ள அமெரிக்க கரன்சி நோட்டுக்கள் ஈராக்குக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
ரசாயன ஆயுதங்கள்:
இதுவரை ஈராக்கில் ரசாயன ஆயுதங்களோ அல்லது பேரழிவு விளைவிக்கும் ஆயுதங்களோ சிக்கவில்லை. இந்தஆயுதங்களை ஈராக் தீவிரவாதிகளுக்குத் திருப்பிவிட்டிருக்கலாம் என பென்டகன் கூறியுள்ளது.
அப்படிப்பட்ட நிலையில் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகளுக்கு எந்த நேரமும் ரசாயன ஆயுத ஏற்படவாய்ப்புண்டு என பென்டகன் அச்சம் தெரிவித்துள்ளது.


