For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேச்சுவார்த்தைகளில் இருந்து புலிகள் திடீர் விலகல்: தயார் நிலையில் ராணுவம்

By Super
Google Oneindia Tamil News

கொழும்பு:

அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இருந்து தாற்கலிகமாக விலகிக் கொள்வதாக விடுதலைப் புலிகள் திடீரெனஅறிவித்துள்ளதையடுத்து இலங்கை ராணுவத்தை உஷார் நிலையில் இருக்குமாறு அதிபர் சந்திரிகா குமாரதுங்காஉத்தரவிட்டுளளார்.

அடுத்த சுற்று இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கப் போவதில்லை என விடுதலைப் புலிகள் நேற்றுதிடீரென அறிவித்தனர். இது அனைத்துத் தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயங்களை இலங்கை அரசு அமல்படுத்தாமல்தாமதப்படுத்தி வருவதால் அதைக் கண்டித்து வரும் 29ம் தேதி முதல் தாய்லாந்தில் நடக்கும் பேச்சுவார்த்தைகளில்பங்கேற்க மாட்டோம், ஜூன் மாதம் ஜப்பானில் நடக்கும் நன்கொடையாளர் மாநாட்டிலும் பங்கேற்க மாட்டோம்என புலிகள் அறிவித்தனர்.

இதையடுத்து இலங்கையில் அதிர்ச்சி அலை பரவியுள்ளது. இரு பேச்சுவார்த்தைகளை மட்டுமே புறக்கணிப்பதாகபுலிகள் அறிவித்திருந்தாலும் இதன்மூலம் ஒட்டுமொத்த அமைதிப் பேச்சுவார்த்தையும் அடியோடுபாதிக்கப்படலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைகளை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வரும் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, புலிகளின் இந்தஅறிவிப்பை சாக்காக வைத்துக் கொண்டு ராணுவம், கடற்படை, விமானப் படைகளை தயார் நிலையில்இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக சந்திரிகா வெளியிட்டுள்ள அறிக்கையில், புலிகளின் இந்த அறிவிப்பு பெரும் அதிருப்தியைஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் விரைவில் அவர்கள் மனம் மாறி பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பர் என்றுநம்புகிறேன்.

பேச்சுவார்த்தைகளில் இருந்து விலக புலிகள் கூறியுள்ள காரணங்கள் உப்பு சப்பில்லாதவை என்று கூறியுள்ளார்.

புலிகளின் அறிவிப்பைத் தொடர்ந்து நேற்றிரவு முப்படைகளின் தளபதிகளையும் சந்திரிகா அவசரமாகக் கூட்டிஆலோசனை நடத்தினார். மீண்டும் தாக்குதல் நடத்தத் தயாராக இருக்குமாறு அவர் படையினருக்குஉத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

1995ம் ஆண்டில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மீண்டும் செய்யுமாறு அவர் ராணுவத்துக்குஉத்தரவிட்டுள்ளார். அந்த ஆண்டில் தான் சந்திரிகாவுக்கும் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைதோல்வியடைந்தது.

இதையடுத்து ராணுவம் தமிழர் பகுதிகளில் திடீர் தாக்குதல் நடத்தி யாழ்பாணத்தின் சில பகுதிகளைப் பிடித்தது.

ரணில் அவசர ஆலோசனை:

இதற்கிடையே இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனது மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன்நேற்றிரவும் இன்று காலையும் அவசர ஆலோசனைகளில் ஈடுபட்டார்.

பேச்சுவார்த்தைகளைப் புறக்கணிக்கும் புலிகளின் முடிவு குறித்து உடனடியாக ரணில் கருத்துத் தெரிவிக்கமறுத்துவிட்டார். இப்போது லண்டனில் உள்ள இலங்கை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் உடனடியாக கொழும்புவிரைகிறார். அவர் தான் இலங்கை அரசு சார்பில் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குத் தலைமை வகித்து வருகிறார்.

அவருடன் ஆலோசனை நடத்திய பிறகே ரணில் தனது கருத்தை வெளியிடுவார் என்று தெரிகிறது.

அடுத்த சுற்று தாய்லாந்து பேச்சுவார்த்தை மற்றும் மற்றும் ஜப்பான் மாநாடு ஆகியவற்றைத் தான் புலிகள்புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். நிரந்தர பேச்சு நிறுத்தம் என்று அவர்கள் கூறவில்லை. புலிகளின் அரசியல்ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் நேற்று ரணிலுக்கு எழுதிய கடிதத்தில் கூட, இனப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தைமூலம் தீர்வு காணத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பேச்சுவார்த்தைகளில் இருந்து தாற்கலிகமாக விலகிக் கொள்வதாக மட்டுமே அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X